கமலுக்கும், ரஜினிக்கும் கெட்-அவுட் சொன்ன வாட்டாள் நாகராஜ்!

0
1314

காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்காமல் இழுத்தடித்து வரும் மத்திய அரசுக்கு எதிராக கடும் கண்டனங்கள், எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், தமிழகத்தின் புதிய அரசியல்வாதிகளாக அவதரித்திருக்கும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரும் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர்.

காவிரி தீர்ப்பைப் பற்றி ரஜினி என்ன பேசினார் தெரியுாமா..?ரஜினிகாந்த்:
ரஜினிகாந்த் ‘காவிரியில் தமிழர்களுக்கு உள்ள உரிமையை நிலைநாட்ட காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார். இதுவே ஒரே தீர்வு என்றும் மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

ரஜினிக்கு பீட்டா அமைப்பில் இருந்து கடிதம்!கன்னடத்தினர் மிரட்டல்:
ரஜினிகாந்த் இந்த பிரச்சினையில் தலையிடக்கூடாது என்றும், கர்நாடகத்தில் வாழும் 1 கோடி தமிழர்களை அவர் நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும் கர்நாடகா மாநில சேவா சமிதி எச்சரித்துள்ளது. இந்த மிரட்டல் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் விடப்பட்ட மிரட்டலாகவே பதிவாகி இருக்கிறது.

ஆரம்பமே அதிரடியில் தொடங்கிய கமல்..!கமல்ஹாசன் ட்வீட்:
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன் தனது ட்விட்டரில் கருத்தை பதிவு செய்துள்ளார். “பாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதி நீரைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, தன் நாட்டுக்குள் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்து தர முடியாதா? இது இயலாமை அல்ல; இழிவான அரசியல். கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம்” என சாடியிருந்தார்.

வாட்டாள் எச்சரிக்கை:
இதையடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரின் மீதும் கன்னட அமைப்புக்கள் பெருங்கோபம் அடைந்துள்ளன. இருவரும் கர்நாடகத்திற்குள் இனி அனுமதிக்கப்படமாட்டார்கள் என வாட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார்.

 

உங்க கருத்தை தெரிவிக்கலாம்