சந்நியாசியாகவும் மாற மாட்டார்… அரசியலுக்கும் வர மாட்டார்… ரஜினியின் பிறந்தநாள் ஜாதகப் பலன்கள்!

0
30295
            #ரஜினிகாந்த் பிறந்தநாள் சிறப்புப் பதிவு [12 - டிசம்பர்]

 

ர்நாடகாவில் பிறந்து தமிழ்நாட்டில் புகழின் உச்சத்தை அடைந்திருக்கும் மராட்டியரான ரஜினிகாந்த் அவர்களின் ஜாதகத்தை பிரபல ஜோதிட ஆராய்ச்சியாளர் அபிமன்யூவின் ஆராய்ச்சிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, அவரது சினிமா வாழ்க்கை, அரசியல் வாழ்க்கையின் நிகழ் மற்றும் எதிர்காலங்கள் குறித்து கீழே விரிவாக தரப்பட்டுள்ளது.

 

சந்நியாசியாகவும் மாற மாட்டார்... அரசியலுக்கும் வர மாட்டார்... ரஜினியின் பிறந்தநாள் ஜாதகப் பலன்கள்!

சினிமா எண்ட்ரீ:

சிம்ம லக்கினத்தில் பிறந்த ஜாதகருக்கு 5-ம் பாவம் தனுசு ராசியில் அமைந்துள்ளது. அதன் அதிபதி குரு. நட்சத்திர அதிபதி சுக்கிரன். கலைகளுக்கான கிரகம் உப நட்சத்திர அதிபதி ராகு. பாவ அதிபதி குரு, மீனத்தின் அதிபர். மீன ராசி சினிமாத்துறைக்கு முக்கியமான ராசி. குரு 7-வது பாவத்தில் உள்ளார். 7-வது பாவமும் சினிமாத்துறைக்கு முக்கியமானது. ராகு போட்டோகிராபி தொழிலுக்கு முக்கியமான கிரகம். எனவே நட்சத்திர அதிபதியான ராகுவும் சினிமாத்துறைக்கு முக்கியமானதாகும். எனவே ரஜினிகாந்த் சினிமாத் துறையில் நுழைந்தார்.

சந்நியாசியாகவும் மாற மாட்டார்... அரசியலுக்கும் வர மாட்டார்... ரஜினியின் பிறந்தநாள் ஜாதகப் பலன்கள்!

பிரபலம் ஆனது:

11-வது அதிபதியான புதன், 5-ம் வீட்டில் அமர்ந்ததாலும், அங்கிருந்து 11ம் பாவத்தைப் பார்வையிடுவதாலும், அவர் சூப்பர் ஸ்டார் ஆகி அதிக செல்வத்தை சம்பாதித்தார். சினிமாவுக்கு முக்கியமான இன்னொரு கிரகம் நெப்ட்யூன். இந்த நெப்ட்யூன் இரண்டாம் பாவத்தில் அமர்ந்துள்ளதால், அது புதன் வீடு ஆதலால், வாக்கு சாதுர்யத்தையும் வியாபார எண்ணத்தையும், கொடுக்கிறது. ஜாதகரது 5-ம் பாவம் சுக்கிர நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. இதுவும் சினிமாத்துறைக்கு வருவதற்கு முக்கிய காரணம்.

சந்நியாசியாகவும் மாற மாட்டார்... அரசியலுக்கும் வர மாட்டார்... ரஜினியின் பிறந்தநாள் ஜாதகப் பலன்கள்!

சனி திசை:

சினிமாவிற்கு முன்பு ராகு தசை சனி புத்தியில் இவர் கண்டக்டர் வேலையில் சேர்ந்தார். சனி உழைப்பாளி. புதன் புத்தியில் நடிப்பு கல்லூரியில் சேர்ந்து படித்து முதலில் வில்லன் வேடத்தில் நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை ஏற்படுத்திக்கொண்டு படிப்படியாக உயர்ந்தார். இப்படியாக தனக்கென ஒரு ஸ்டைலை, அதாவது ஒரு வியாபார உத்தியை ஏற்படுத்திக்கொண்டு உயர்வடைந்தார்.

சந்நியாசியாகவும் மாற மாட்டார்... அரசியலுக்கும் வர மாட்டார்... ரஜினியின் பிறந்தநாள் ஜாதகப் பலன்கள்!

ஆன்மீக ஈடுபாடு:

இவரது லக்கின பாவத்தில் கேது இருப்பதாலேயே இவருக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்படுகிறது. மேலும், 12-வது அதிபதி சந்திரன் 12-ம் பாவத்தை சம சப்தமாகப் பார்க்கிறார். இவரது லக்கின உபநட்சத்திராதிபதி ராகு , குருவின் வீட்டில் அமர்ந்து சனியின் பார்வை பெற்றுள்ளார். தவிர ராகு 3,9,12 இவற்றை குறிகாட்டவில்லை. எனவேதான் இவர் சந்நியாசிகளுடன் பழகுவார். தவிர சந்நியாசி ஆகும் எண்ணம் இருக்காது.

சந்நியாசியாகவும் மாற மாட்டார்... அரசியலுக்கும் வர மாட்டார்... ரஜினியின் பிறந்தநாள் ஜாதகப் பலன்கள்!

அரசியலுக்கு வருவாரா?

ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பது. வருவதென்றால், எப்போது வருவார்? இந்த விஷயத்தை சற்று ஆராய்ந்தோமானால், இவர் பிறந்த லக்கினம் சிம்மம். அதிபதி சூரியன். அரசியல் எண்ணத்தை உண்டுபண்ணுகிறது. சூரியன் 4-ல் அமர்ந்து 6,7-வது அதிபதியான சனியின் பார்வையைப் பெறுகிறார். சூரியனும் சனியும் பகைக் கிரகங்கள் ஆவர். இவரது ஜாதகத்தில், 1,6,10,11 ஆகிய பாவங்கள், பாக்கியம் என்றும் அதிர்ஷ்டம் என்றும் குறிப்பிடப்படும். 1,6,9-ம் பாவங்கள் 11-ஐக் குறிகாட்டவில்லை. புதன்புத்தி வெற்றிக்கு அதிபதியான 11-ஐக் குறிகாட்டுகிறது. ஆனால், 6,9,10 இல்லாதபடியாலும், திசாநாதன் குறிகாட்டவில்லை என்பதாலும், புதன் புத்தி முடியும்வரை அரசியலுக்கு வர இயலாது.

சந்நியாசியாகவும் மாற மாட்டார்... அரசியலுக்கும் வர மாட்டார்... ரஜினியின் பிறந்தநாள் ஜாதகப் பலன்கள்!

நோ பாலிடிக்ஸ்:

இப்போது நடக்கும் திசையும், திசா புத்தியும் கூட இவர் அரசியலுக்கு வருவார் என்று கூறவில்லை. கோச்சாரப்படியும் , சனி, குரு இவர்களின் சஞ்சாரம் வெற்றி கொடுக்கும் அறிகுறிகள் கிடையாது. இது ரஜினி அரசியலுக்கு சாதகமான காலம் அல்ல என்பதைச் சொல்லவேண்டியுள்ளது. அரசியல் அலைகளை ஏற்படுத்துவார். ஆனால் அரசியலுக்குள் இவரால் பிரவேசிக்க முடியாது.