ஹர்திக் பாண்டியா மீது வழக்கு பதிய ராஜஸ்தான் நீதிமன்றம் உத்தரவு..!

0
1987
பாண்டியா மீது வழக்கு பதிய ராஜஸ்தான் நீதிமன்றம் உத்தரவு..!

இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியமான வீரராக இருப்பவர் ஹர்திக் பாண்டியா. ஒவ்வொரு போட்டியிலும் தனது திறமையை நிருபிப்பவர்.

அம்பேத்கர் குறித்து ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மீது வழக்கு பதிவு செய்ய ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஹர்திக் பாண்டியா தனது ட்விட்டரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி அம்பேத்கர் யார் என்றும், இடஒதுக்கீடு என்ற நோயை நாட்டில் பரப்பியவர் என்றும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார்.

இதை எதிர்த்து டி.ஆர்.மேவால் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். அதில் தனது சமூகத்தை பற்றி தவறாக குறிப்பிட்டிருப்பது சமூக மக்களை கடுமையாக பாதிப்படையச் செய்திருப்பதாகவும், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹர்திக் பாண்டியா மீது வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.