ஐபிஎல் தொடர்: அஷ்வினா தினேஷ் கார்த்திக்கா? மோதிப்பார்க்கும் களம்..!

0
917

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் அணியும் இன்று ஈடன் கார்டன் மைதானத்தின் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐ.பி.எல். தொடரின் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போடிட்யில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதிக்கொள்கின்றன. இரண்டு அணிகளுக்குமே தமிழகத்தை சேர்ந்த வீரர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் அஷ்வின் இருவரும்தான் கேப்டன்கள். எனவே இந்த போட்டியில் அனல் பறக்கும் என தமிழக ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் இவர்கள் தலைமையிலான அணிகள் முதல் முதலாக மோதுகின்றன என்பதால் க்யூரியாசிட்டி எகிறியுள்ளது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இவரது அணியில் மோஹித் சர்மாவுக்கு பதிலாக அங்கீத் ராஜ்புத் விளையாடுகிறார். கொல்கத்தா அணியில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. பஞ்சாப் அணியை பொறுத்தவரை ஆண்டவர் கெயிலின் பங்களிப்பு பெரும் வலிமையை கொடுக்கிறது. இதேபோல கொல்கத்தா அணியில் சுனில் நரேன், ரஸல் என அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளனர்.