மன அழுத்தத்தால் இந்த பிரச்சனைகள் எல்லாம் வரும் ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

0
207

இப்போழுது சிறுவர்கள் முதல் பெரியவர் வரை மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளுக்கு உள்ளாகுகின்றனர். மன அழுத்தம் ஏற்பட்டால் பல பிரச்சனைகளும் ஏற்படுத்தும் என்று அமெரிக்காவை சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளது.

மன அழுத்தம்

ஆய்வாளர்கள்:

உளவியால் பேராசிரியர்கள் டொனால்ட் ஷெல்டன் மற்றும் ப்ரோக் கிர்வான் அவர்கள் இருவரும் நடத்திய மன அழுத்தம் தொடர்பான ஆய்வில் மன அழுத்தம் உள்ளவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதாயகவும் அதிக அளவு பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

98 பேர்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அவர்களுக்கு கேட்கப்பட்ட கேள்விகளில், அவர்கள் எந்த அளவு மன அழுத்ததில் உள்ளனர் என்பதும், எவ்வளவு நேரம் தூங்குகின்றனர், எவ்வளவு நேரம் உடற்பயிற்சிகள் செய்கின்றனர் என்பது குறித்தும் கேட்கப்பட்டது.மன அழுத்தம்

ஆராய்ச்சியின் முடிவு:

இது தொடர்பான கேள்விகள் குறைந்த மன அழுத்தம் உள்ளவர்களுக்கும், அதிக மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் தனித்தனியே ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்வர்களுக்கு கணினி திரையில் சில பொருட்களை காண்பிக்கப்பட்டது.

அவை சிலருக்கு தெரிந்து இருந்தது மற்றவர்களுக்கு தெரியவில்லை. அதிமாக மன அழுத்தம் உள்ளவர்கள் கேள்விகளுக்கு அதிமாக கஷ்ட்டப்பட்னர்.

ஆய்வின் முடிவில் அவர்கள் தங்கள் ஞபாக திறனை முற்றிலுமாக இழந்து கொண்டுவருகின்றனர் என்பது அவர்களுக்கு தெரியாமலே இருந்து உள்ளது. அதே மாதிரி மற்றோரு பல்கலைக்கழகமும் நடத்திய ஆய்வில் முடிவுகளும் இதையே தெரிவிக்கின்றன.

மன அழுத்தம்

பிற பிரச்சனைகள்:

பொதுவாக மன அழுத்தம் உள்ளவர்கள் தூக்கமின்மை, தன்னம்பிக்கை இன்றி இருத்தல், எதிலும் ஆர்வம் செலுத்தாது, தனிமையை விரும்புவது, அவ்வளவு ஏன் தற்கொலை செய்து கொள்வது போன்றவை ஏற்படும். அதுமட்டுமில்லாமல் அதிக மன அழுத்ததால் தனக்கு தானே பேசி சிரித்துக் கொள்வது. யரோ பேசும் சத்தம் காதில் கேட்பது போன்றவைகளும் நிகழும்.

மன அழுத்தம்

தீ்ர்வு:

மன அழுத்தத்தில் இருப்வர்களை தகுந்த சிகிச்சை முறையின் மூலம் குணப்படுத்தலாம். இந்த மன அழுத்தம் இருப்பவர்கள் உடனடியாக உளவியல் மருத்துவரை அனுகி பிரச்சனைகளில் இருந்து தீர்வுகளை பெறலாம். எல்லாம் தமது மனதில் வைத்துக் கொள்ளாமல் மற்றவர்களிடத்தில் இயல்பாக பேசி பழகுவதால் மனத்தில் பல கவலைகள் குறையும்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்