யார் இந்த நிர்மலா தேவி? போலீஸ் விசாரணையில் வெளியான பரபர பின்னணி!

0
2023

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறாக நடத்திய புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

யார் இவர்?
அருப்புக்கோட்டையில் உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த ஆசிரியர் பரமசிவத்தின் மகள்தான் இந்த நிர்மலா தேவி. இவருக்கு நாற்பத்து ஆறு வயது ஆகிறது. எம்.எஸ்.சி., எம்.ஃபில்., பி.ஹெச்.டி. வரை படித்திருக்கிறார். தேவாங்கர் நடுநிலைப்பள்ளியில் ஆரம்பக் கல்வியும், மகளிர் பள்ளியில் மேல்நிலை கல்வியும் பயின்றிருக்கிறார். மதுரை காமராஜர் பல்கலைக்கழத்தில் பி.ஹெச்.டி. பட்டம் பெற்றுள்ளார். பத்து ஆண்டு காலம் இவர் பேராசியர் பணியில் பணியாற்றி வந்துள்ளார்.

கணவருடன் சண்டை:
இவரது கணவர் சரவண பாண்டி வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக அருப்புக்கொட்டையிலேயே செட்டில் ஆகி இருக்கிறார். அருப்புகோட்டை நகராட்சி ஒப்பந்ததாரராக பணியாற்றுகிறார். கடந்த 2016ம் ஆண்டு இவருக்கும் நிர்மலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இருவருக்கும் இடையே பல பிரச்சினைகள். எனவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இரண்டு பிள்ளைகள்:
சரவண பாண்டிக்கும், நிர்மலா தேவிக்கும் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். முதல் மகள் தனியார் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ். படித்து வருகிறார். இரண்டாவது மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இருவருமே தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார்கள்.

கைது விசாராணை:
பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளிடம் தகாத விதத்தில் பேசிய விவகாரம் நெருப்பாக பரவியுள்ளது. நிர்மலா பேசிய அழைப்பு பதிவு செய்யப்பட்டு வாட்ஸ்அப் மூலம் பரவி இருக்கிறது. இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் குறிப்பிட்ட அந்த ‘உயர் அதிகாரிகள்’ யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நிர்மலாதேவி, எந்த உயர் அதிகாரிக்காக இப்படி பேசினார் என்பதை கண்டுபிடிக்க 5 பேர் கொண்ட ஆய்வுக்குழுவை அமைத்துள்ளது மதுரை பல்கலைக்கழகம்.

நிர்மலா தேவி அப்படி பேசியது ‘அவருக்காக’ தானா? உடையும் உண்மை!

உங்க கருத்தை தெரிவிக்கலாம்