நயன்தாரா வீட்டை முற்றுகையிட தயாரிப்பு சங்கத்தினர் முடிவு!

0
1045
நயன்தாரா வீட்டை தயாரிப்பு சங்கத்தினர் முற்றுகையிட முடிவு..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என பல மொழிகளில் மிகவும் பரபலமான நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. நடிகர்களுக்கு அடுத்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் வைத்திருக்கும் நடிகை நயன்தாரா தான்.

தென்னிந்திய திரையுலகில் தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளாக தேர்வு செய்து நடித்துக்கொண்டு இருக்கிறார்.

நயன்தாரா வீட்டை தயாரிப்பு சங்கத்தினர் முற்றுகையிட முடிவு..!

வாசுகி:

தற்போது தமிழ் தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ரைக் அறிவித்து நடைபெற்று வருகிறது. அதனால் படப்பிடிப்பு மற்றும் தமிழ் படங்கள் திரையிடவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மம்முட்டி மற்றும் நயன்தாரா நடித்த “புதிய நியமம்” என்ற மலையாள படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் படத்தை தமிழில் டப்பிங் செய்யப்பட்டு தமிழில் “வாசுகி” என்ற பெயரில் 29ஆம் தேதி வெளியிடப்போதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா வீட்டை தயாரிப்பு சங்கத்தினர் முற்றுகையிட முடிவு..!

வீட்டை முற்றுகையிடல்:

இதனால் திரைப்பட தயாரிப்பாளர்கள் நடிகை நயன்தாரா மீது அதிருப்தி உள்ளனர். தமிழ் தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் நடைபெற்று வரும் சூழலில் நயன்தாராவின் படம் தமிழில் வெளியாக இருப்பது வேதனை தருவதாக உள்ளது என்றும். அவர் உடனே தலையீட்டு படம் வெளியாகுவதை தடுக்க வேண்டும் என்று நடிகை நயன்தாராவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியாவது உறுதியானால் அவரின் வீட்டை முற்றுகையிடப் போவதாகவும் தயாரிப்பாளர் சங்கத்தில் முடிவு செய்துள்ளனர். நேரடியான தமிழ் படமோ அல்லது டப்பிங் படமோ, தற்போது வெளியானல் ஸ்ட்ரைக் பாதிக்கப்படும் ஸ்ட்ரைக் முடியும் வரை எந்த படம் வெளியிடப்படாது எனவும் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரித்துள்ளது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்