இயற்கையின் பாதுகாவலனாக இருக்கும் புங்கையின் மருத்துவ குணங்கள்..!

0
1270

புங்கை மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டதாகவே உள்ளது. இவற்றில் இருக்கும் பல நல்ல விசயங்கள் தெரிந்தால், ஒவ்வொரு வீடுகளிலும் கண்டிப்பாக வளர்பீர்கள். இவை விவசாயத்திற்கும் மருத்துவத்திற்கும் சுற்றுசூழலுக்கும் பல நன்மைகளை வழங்குகிறது.

சுற்றுசூழல் காவலன்:
புங்கை மரம் ஒரு சுற்றுசூழலுக்கு சிறந்த அறனாக இருந்து பாதுகாக்கிறது. இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் தான் இவை அதிகம் காணப்படும். கோடைகளங்களிலும் பசுமையாக இருக்க கூடியவை.

புங்கை மரத்தை பொறுத்தவரையில் சுத்தமான காற்றை தருகிறது. ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்து இவைக்கு தான் உண்டு.

வெப்பத்தின் தன்மையை உறிஞ்சி சீரான சூழலை ஏற்படுத்தும். புவி வெப்பமாதலை தடுக்கும் முக்கிய காரணியாகவும் புங்கை மரம் உள்ளது.

இந்தியாவின் அனைத்துப்பகுதியிலும் வளரும் மரம். வறண்டபூமியிலும் நன்கு வளர கூடியவை. அனைந்து பருவநிலையிலும் தனது தன்மையை இழக்காது சுற்றுசூழலின் காவலனாக புங்கை மரம் உள்ளது.

பயோ டீசல்:
புங்கை மரத்தின் விதைளில் 25 முதல் 40 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெய் பயோ டீசலாகவும் பயன்படுத்தலாம். விளக்கு எரியவும், சோப்பு தயாரிக்கவும், பெயிண்ட்கள் தயாரிப்பிலும், ஆயுர்வேத மருந்துகளிலும், விவசாயத்தில் பூச்சிக்கொல்லி தயாரிக்கவும் புங்கை விதையில் இருந்து பெறப்டும் எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

விவசாய பயன்கள்:

  • விவசாயம் செய்ய முடியாத தரிசு நிலங்களில் புங்கை மரங்களை நடுவதால் வேர்கள் மண்ணின் நைட்ரஜன் சத்தை உருவாக்குகிறது. விவசாயம் செய்ய முடியாத நிலங்களும் வளமாக்கும் திறன் இவற்றிக்கு உள்ளது.
  • புங்கை செடிகளுக்கு இடையே ஊடுபயிரும் செய்ய முடியும். அதானல் இரண்டு மடங்கு விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும்.

மருத்துவ பயன்கள்:

  • புங்ககை மரத்தின் இலை சாறு வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாக உள்ளது. செரிமான தொந்தரவு இருப்பின் இவற்றின் சாறு சிறந்ததாக இருக்கும்.
  • பளபளப்பான மெனியை பெற விதையின் எண்ணெய் பயன்படுத்தவும்.
  • இருமல், சளி, பசியின்மையை போன்றவற்றை போக்கும் தன்மை இலைச் சாறுக்கு உள்ளது.
  • தோல் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு இலையின் சாறு மூலம் குணப்படுத்தலாம்.
  • புங்கையின் பூக்கள் உடலின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.
    வேரின் பட்டையைப் பொடி செய்து 500 மி.கி. வீதம் மூன்று வேளை உட்கொண்டு வந்தால் இருமல் சரியாகிவிடும்.
  • புங்க வேரின் தோலை நீக்கி, மெல்லியதாக சீவி சாறு பிழிந்து அதற்கு சமமான அளவு தேங்காய்பால் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு, ஒரு மெல்லிய துணியில் நனைத்து, பிளவை, ஆறாத புண்கள், பால்வினை நோய்களால் ஏற்பட்ட புண்கள் மீது தடவிவந்தால் புண்கள் எளிதில் குணப்படுத்தும்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்