அடித்த அடி மறந்துபோனது… மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் பீட்டா!

0
179

2017 ஜல்லிகட்டு சட்டத்தை திரும்பப் பெற கோரி தமிழக அரசுக்கு பீட்டா இந்தியா அமைப்பு கடிதம் அனுப்பியிருக்கிறது. இது தமிழர்களிடையே மீண்டும் ஆர்ப்பரிப்பை உண்டாக்கியுள்ளது.

அதிர்ந்தது அலங்கை:
பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்பு ஜல்லிகட்டு விளையாட்டின் போது காளைகளட துன்புறுத்துவதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன் பேரில் ஜல்லிகட்டு விளையாட்டுக்கு தடைவிதித்தது. அதனால் மூன்று ஆண்டுகளாக ஜல்லிகட்டு நடக்கவில்லை எனவே சென்றாண்டு அலங்காநல்லூரில் தொடங்கிய போராட்டம் சென்னை மெரினாவில் பரவியது.

தமிழன் டா:
தமிழரின் அளையாமாக விளங்கும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்ட எதிர்த்து பல லட்சக்கணக்கான மக்கள் போராடி தடையை தகர்த்து மீண்டும் ஜில்லிகட்டை நடத்தினர். ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் இயற்றி, அதை சட்டமன்றத்தில் கொணர்ந்து தீர்மானம் நிறைவேற்றியதுடன், இந்த வீரவிளையாட்டு மீதான தடையை நீக்கியது தமிழக அரசு. அத்துடன் தமிழர்களை மிரட்டி வந்த பீட்டா அமைப்புக்கும் சமாதி கட்டினர். இப்போது ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகள் எதிர்காலத்தில் தடை செய்யப்படும் என்று கூறிக்கொண்டு பீட்டா பின்வாங்கியது.

ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை... சீறிப்பாய தயாராகும் காளைகள்!மீண்டும் பீட்டா:
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் ஜல்லிக்கட்டுக்குள் தலை விட்டிருக்கிறது பீட்டா. தமிழக அரசு இயற்றிய 2017 ஜல்லிகட்டு சட்டத்தை திரும்பப் பெற கோரி தமிழக அரசுக்கு பீட்டா இந்தியா அமைப்பு கடிதம் அனுப்பியிருக்கிறது. 2017 மற்றும் 2018 ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொண்டிருந்த காலைகளில் பத்துக்கும் மேற்பட்ட காளைகள் மரணித்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது. பீட்டா சொல்லும் இந்த புள்ளிவிவரம் சரியானது அல்ல என்று சமூக ஊடகங்களில் கருத்துக்கள் எழுந்துள்ளன.

ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை... சீறிப்பாய தயாராகும் காளைகள்!அடி மறந்துவிட்டது:
தமிழர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் போராடிய பீட்டா, தமிழர்களின் போராட்டத்தின் வெற்றியால் வாங்கி அடி மறந்துபோய் மீண்டும் வால் ஆட்டத் தொடங்கியுள்ளது.

 

 

உங்க கருத்தை தெரிவிக்கலாம்