பழனிக்கு சிலை செய்ததில் பல கோடிகளை முழுங்கிய முத்தையா ஸ்பதி… சும்மா விடுவாரா முருகன்?

0
1379

பழனி முருகன் கோவிலின் உற்சவர் சிலை செய்வதில் பல கோடிகளை மோசடி செய்த முத்தையா ஸ்பதி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

நவபாஷான சிலை:
போகமுனி சித்தரின் கைகளால் நவபாஷாணத்தால் செய்யப்பட்டு, கருவறையில் நிர்மாணிக்கப்பட்டதுதான் பழனி தண்டாயுதபாணி சாமியின் சிலை. அபிஷேகம் நடத்தினால் சிலையில் உள்ள நவபாஷானம் கரைந்து செல்கிறது என்பதால், இந்த சிலைக்கு தினசரி ஆறுகால பூசை மட்டுமே நடைபெறுகிறது. இப்படி இருந்தும் இந்த சிலையின் பின்பக்கத்தில் நவபாஷானத்தை சுரண்டி எடுத்து ஒரு கும்பல் விற்று காசு பார்த்தது. எனவே நவபாஷான சிலையை கருவறையில் இருந்து அகற்றி வேறு ஒரு ப்ரித்யேக அறையில் பாதுகாப்பாக வைத்து பராமரிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் கருவறையில் புதிய சிலை ஒன்றும் நிறுவிட, அச்சிலை 200 கிலோ ஐம்பொன்னில் செய்து நிர்மாணித்திடவும் முடிவு செய்யப்பட்டது.

புதிய சிலை:
2004ம் ஆண்டில் இருந்து சிலை வார்ப்பு பணிகள் மும்மரமாக நடந்தன. ஆனால் நவபாஷான சிலையை இடம்பெயர்க்கும் போது, அதை கடத்தி வெளிநாட்டிற்கு விற்பதற்கான சதித்திட்டங்கள் அம்பலம் ஆனது. இதனால் கருவறை சிலையை மாற்றும் திட்டம் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது ஜி.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் சிலை கடத்தல் பிரிவு ரகசிய ஆய்வுகளை மேற்கொண்டனர். மூலஸ்தானத்தில் உள்ள தொன்மையான முருகன் சிலை அகற்றப்படக் கூடாது என இந்திய தொன்மவியல் சட்டத்தில் உள்ளது. சட்ட அமைப்புகளை மீறி அருணாச்சடேஸ்வர ஸ்பதி என்பவர் புதிய முருகன் சிலையை செய்ய முற்பட்டார். அவரை குற்றவாளி என அறிவித்தது நீதிமன்றம். பின்னர் அவர் இறந்துவிட்டார்.

மோசடி முத்தையா:
இதற்கு இடையில், 200 கிலோ என நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக, 220 கிலோ அளவில் புதிய ஐம்பொன் சிலை உருவாக்கப்பட்டது. சிலையை வார்த்தவர் முத்தையா ஸ்பதி. ஆகம விதிகளின் படி, பழனி திருக்கோயில் சிலைகள் கோயிலில்தான் உருவாக்கப்பட வேண்டும். ஆனால் முத்தையாவோ, ஆகம விதிகளை மீறி கேளம்பாக்கத்தில் உள்ள தனது சிலை தயாரிப்பு கலைக்கூடத்தில் வைத்து சிலை வார்த்திருக்கிறார். இச்சிலை கோயிலில் நிறுவப்பட்டு தினந்தோறும் அபிஷேக, ஆராதனைகள் நடந்து வந்தன. ஆனால் நாளடைவில் சிலையின் பொலிவு குறைந்து போனது. கருமை அடைந்தது. ஜி.ஜி. பொன் மாணிக்கவேல் உத்தரவின் கீழ் இந்த சிலை இருட்டு அறையில் பூட்டிவைக்கப்பட்டது. இந்த சிலைக்கு பூஜைகள் ஏதும் நடக்கவில்லை.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்