ஏ.டி.எம்.களில் ‘நோ மணி’ ஹே… மீண்டும் பணமதிப்பிழப்பு அமலுக்கு வருகிறதா?

0
823

நாடெங்கும் உள்ள ஏ.டி.எம். மையங்களில் மீண்டும் பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மெஷின்களில் இருந்து பணத்தை வெளியில் எடுக்க முடியாமல் மக்கள் திண்டாடத் தொடங்கியுள்ளனர். இதனால் மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்படுமா என மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

பணம் இல்லை:
தமிழ்நாட்டிலும் பணப்புழக்கம் குறைந்துவிட்டது. ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க முடியவில்லை என மக்கள் புலம்புகின்றனர். ஆனால் இது தற்காலிகமான பிரச்சினைதான் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருக்கிறார். இருப்பினும் மக்கள் தங்கள் அன்றாட தேவைக்காக கூட பணத்தை எடுக்க முடியாமல், வங்கிகளுக்கே படை எடுக்கிறார்கள்.

காலியான ஏ.டி.எம்.கள்:
குறிப்பாக உள்மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, சேலம் உள்பட பல மாவட்டங்களில் உள்ள ஏ.டி.எம். மையங்கள் இயங்கவில்லை. பல்வேறு ஏ.டி.எம். மையங்கள் பணம் இல்லாமல் நிற்கிறது. இன்று சென்னையின் முக்கிய இடங்களில் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் இல்லை என புகார்கள் குவிந்திருக்கின்றன.

தென் மாவட்டங்கள்:
காரைக்குடி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லை என புகார்கள் வருகின்றன. குறிப்பாக மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகள், தொழிற்சாலை பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் இல்லை என்பதால் மக்கள் மீண்டும் திண்டாட ஆரம்பித்துள்ளனர்.

அருண் ஜெட்லி:
இதுகுறித்து அருண் ஜெட்லி கூறுகையில், பணத்தட்டுப்பாடு தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டிருக்கிறது. போதிய அளவில் பணத்தை புழக்கத்தில் விட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வங்கிகளிடம் கையிருப்பில் பணம் உள்ளது என்றாலும், வழக்கதிற்கு மாறான பணத்தப்பட்டுப்பாடு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

அரசு விளக்கம்:
தேவைக்கு ஏற்ப பணம் விநியோகம் செய்யப்படும் என்றும், இயங்காமல் உள்ள ஏ.டி.எம். மையங்கள் இயக்கத்திற்கு கொண்டுவரப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் காலம் என்பதால் பணத்திற்கு தட்டுப்பாடு எழுந்துள்ளதாக விவரம் அளிக்கப்பட்டுள்ளது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்