புத்தாண்டில் திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செய்யலாமா?

0
936

வைகுண்ட ஏகாதசி, மார்கழி பிரம்மோற்சவம், தெப்போற்சவம் உள்ளிட்ட விசேட நாட்களில் திருப்பதி ஏழுமலையானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, விமர்சையாக பூஜைகள் செய்யப்படும். ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கும்போதும் திருப்பதி ஏழுமலையானுக்கு பூஜைகள் செய்யப்பட்டு தரிசனம் காண்பிக்கப்படும்.

புத்தாண்டில் திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செய்யலாமா?

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு திருப்பதி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். ஆனால் ஆங்கிலப் புத்தாண்டு என்பது இந்து மதத்திற்கு விசேட நாள் அல்ல. இருப்பினும் கடந்த வருடம் வரை புத்தாண்டு சிறப்பு தரிசனம் காண்பிக்கப்பட்டது.

இந்தாண்டு திருக்கோவில்கள் சீர்திருத்தத்தின் கீழ் ஆங்கிலப் புத்தாண்டு அன்று எந்த கோவில்களிலும் சிறப்பு தரிசனங்கள் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் தெலுங்கு வருடப் பிறப்பில் மட்டுமே சிறப்பு தரிசனம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இம்முறை திருமலை வெங்கடாஜலபதி கோவிலில் புத்தாண்டு கொண்டாட்டம் கிடையாது. ஆனால் வைகுண்ட ஏகாதசிக்கு செய்யப்பட்ட அலங்காரங்கள் ஒரு வார காலத்திற்கு அப்படியே இருக்கும் என்றும், பக்தர்களுக்கு வழக்கமான தரிசனங்கள் காண்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.