அரிசியைப் பற்றி நம்பும் இந்த விஷயங்களெல்லாம் அவ்வளவும் பொய்!!

0
12

அரிசியா தொடவே தொடாதீங்க என்று இப்போது கூப்பாடு போடுபவர்கள் இத்தனை காலம் இதனைப் பற்றி வாய் திறக்கவே இல்லை.

ஒரு பொருளை வேண்டாம் என்றும், கண்டிப்பாக சாப்பிடுங்கள் என்று யாரோ ஒருவர் கூற, நாம் அதனை கேட்டு ஏமாறுவதை கவனித்துளீர்களா?

இத்தனை ஆண்டு காலம் நமது சீதோஷ்ணம், விளைச்சல் ஆகியவற்றிற்கு ஏற்றபடி, அனுபவத்தில் உணர்ந்து தேடி உணவுகளை சாப்பிட்டு நோய் நொடி இல்லாமல் நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள்.

அதன்பின்…’அதை சாப்பிடாதீங்க. இதைச் சாப்பிடுங்க .. மீண்டும் அதையே சாப்பிடுங்க” என பழையதை மீண்டும் புதுப்பித்து தந்து
கொண்டிருக்கிறார்கள்.

இடையில் நடந்ததென்ன? நோய் ! பலப்பல புதுநோய்கள் உருவானதும்., மீண்டும் பழையதை தேடிப் போகச் சொல்கிறார்களென்றால் இதன் பின் மிகப்பெரிய வணிகம் இருக்கத்தானே செய்கிறது.

“கரியும், உப்பும் எதுக்கு? இதில் பல் விளக்குங்க”- என்று 80 களின் இறுதியில் பற்பசைகளுக்கு விளம்பரம். அதன் பின் வளர்ந்த பல் மருத்துவம். இப்போது அதே பற்பசைகளில் கரியும், உப்பையும் புகுத்துவதன் நோக்கம் என்ன?

இது ஒரு உதாரணம்தான் இப்படி பல்வேறு விஷயங்களை கிளறினால் இன்னும் வரும்.
அதில் ஒன்றுதான் அரிசி. அரிசியை சாப்பிடாதீர்கள். அதற்கு பதிலாக ஓட்ஸ் சாப்பிடுங்கள் என்று சொல்வது வெளி நாட்டுக்காரனின்
ஓட்ஸை நமக்கு அறிமுகப்படுத்தி அதன் வியாபாரத்தை முடுக்குவதறாகத்தான்.

ஆனால் உண்மையில் ஓட்ஸிலும், அரிசியிலும் ஒரே அளவு கார்போஹைட்ரேட் தான் இருக்கிறது. குறிப்பாக ஓட்ஸ விட அதிக பி
காம்ப்ளக்ஸ் சத்து அரிசியில் இருக்கிறது என்ப்தை மறந்துவிட்டு, ஓட்ஸின் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறோம்.

அப்படி அரிசியைப் பற்றி உங்களிடம் சொன்ன இந்த விஷயங்களெல்லாம் பொய். உண்மை என்ன என்று தெரிந்து கொள்ள இந்த கட்டுரையைப் படிங்க.

அரிசி சாப்பிட்டால் குண்டாவோம் :

இது தவறு. அரிசி உணவை சாப்பிடுவதால் உடல் எடை கூடாது. ஆனால் உடல் எடைகுறையும் தெரியுமா? யோசித்து பாருங்கள். வயல் வெளிகளில் வேலை செய்பவர்கள் மூன்று வேளையும் அரிசி உணவுகளைத்தான் சாப்பிடுகிறாகள். அளவோடு சாப்பிட்டால் நிச்சயம் அரிசி உணவினால் உடல் எடை கூடாது.

இரவில் அரிசி உணவு சாப்பிடக் கூடாது :

இதுவும் உண்மையில்லை. இரவில் தாரளமாக அரிசி உணவுகளை சாப்பிடலாம். ஆனால் 8.30 க்குள் சாப்பிடுவதால் வேகமாக செரித்து உடல் எடை கூடாமல் தவிர்க்கலாம். எந்த உணவாக இருந்தாலும், 10 மணிக்கு மேல் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்பதை நினைவில் கொள்க.

எளிதில் செரிக்காது :

இதுவும் பொய்தான். ஒரு வயது குழந்தைக்கு பருப்பு சாதம், அரிசி கஞ்சி இவை எல்லம தருவதறெகு காரனம் எளிதில் ஜீரணமாகும். உடல் நலம் குன்றியவர்க்ளுக்கு ஏன் அரிசி கஞ்சியை பரிந்துரைக்கின்றோம்., காரணம் அரிசி எளிதில் சீரணமாகுமென்பதால்தான். பிரவுன் அரிசியில் அதிக நார்ச்சத்து இருக்குமென்பதால் அது மட்டும் செரிக்க சற்று நேரமெடுக்கும்.

சர்க்கரை வியாதிக்காரர்கள் அரிசி சாப்பிடக் கூடாது :

அரிசி உணவுகளை சர்க்கரை வியாதி வந்தவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என பல இடங்களில் கேள்விப்படுகிறோம். இது முற்றிலும் தவறு. அளவோடு, மற்ற காய்கறி வகைகளுடன் தாராளமாக அரிசி உணவுகளை சாப்பிடலாம்.

அரிசியில் க்ளூடன் உள்ளது :

க்ளூசன் என்ற பொருள் அலர்ஜியை சிலருக்கு உண்டாகும். அந்த க்ளூடன் அரியில் சுத்தமாக இல்லை. இதனால் அலர்ஜி உண்டாகாது. இந்த க்ளூடன் கோதுமை, மைதா, போன்ற பொருட்களில் அதிகம் இருக்கின்றது.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்