ராணுவ உடையில் பத்மபூஷண் விருதை பெற்றுக்கொண்டார் தோனி..!

0
91

ஒவ்வொரு துறையில் சாதித்தவர்களுக்கு குடியரசு தலைவர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுவர்கள். அந்த வகையில் விளைாட்டு துறையில் சாதித்த கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு “பத்மபூஷண்” விருது வழங்கப்பட்டது.

மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், பொது நிர்வாகம், குடியுரிமை பணி, வர்த்தகம், தொழில் உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிவோர்களுக்கு “பத்ம” விருதுகளை வழக்கி கௌரவிக்கும்.

இந்தாண்டு 3 பேருக்கு “பத்ம விபூஷண்” விருதும், 9 பேருக்கு “பத்மபூஷண்” விருதும், 72 பேருக்கு “பத்மஸ்ரீ” விருதுகளும் கடந்த ஜனவரி மாதம் அரசு அறிவித்தது. முதற்கட்டமாக கடந்த மாதம் 20 தேதி இசைஞானி இளையராஜா உள்ள பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாம் கட்டமாக நேற்று பத்ம விருதுகள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று வழங்கினார். இதில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி இராணுவ உடையில் வந்து பத்மபூஷண் விருதினை பெற்றுக்கொண்டார். அவரை தொடர்ந்து பிலியட்ஸ் வீரர் பங்கஜ் அத்வானி, தமிழக நாட்டுப்புற கலைஞர் விஜய லக்‌ஷ்மி உள்ளிட்டோருக்கு விருதுகளை பெற்றுக்கொண்டனர்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்