புதிய இந்தியாவின் புதிய சாதனை!! உலகின் நம்பர் ஒன் இடம் இந்தியா!

0
18

பெண்கள் நாட்டின் கண்கள்- இது இந்தியாவின் மந்திரம்!!  இதற்கொன்றும் குறைச்சலில்லை .

1 வயது குழந்தையிலிருந்து 90 வயது வரை பாட்டி வரை எந்த பெண்ணிற்கும் இங்கு
பாதுகாப்பில்லை. ஆனால் ஓடும் நதியிலிருந்து தாங்கும் பூமி வரை பெண்களின் பெயர்
என்ன வேண்டிகிடக்கிறது?

நாட்டில் பெண்கள் மட்டுமல்ல பெண்குழந்தைகள் கூட வெளியில் ஓடி நடமாட
முடியாவிட்டால் இந்த நாடு நாசமாகவே போகட்டும். இருந்தென்ன லாபம்.

தாம்சன் ர்யூட்டர் ஃபவுண்டேஷன் என்ற மீடியா கம்பெனி ஆன்லைனில் ஒரு சர்வே
செய்தது. உலகளவில் மார்ச் 26 முதல் மே 4 வரை ஆசியா, ஆஃப்ரிகா, பசிபிக் என
உலகளவில் எல்லா நாடுகளிலும் நடத்திய கணக்கெடுப்பை இரு நாட்களுக்கு முன்
வெளியிட்டது. அதன் அடிப்படடையில் பெண்களுக்கு ஆபத்தான முதல் 10 நாடுகள் எவை என்று கீழே சொல்லப்பட்டுள்ளது. இவை வெறும் கற்பழிப்பு மட்டுமல்ல, அவர்களுக்கெதிராக நடைபெறும் வன்கொடுமைகள், கலாச்சாரம் என்ற பெயரில் நடக்கும் அக்கிரமங்கள், பாலியல் துன்புறுத்தல்கள் எல்லாவற்றையும் கணக்கிலெடுக்கப்பட்டு முடிவை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக சில மாதங்களுக்கு முன் வெளி வந்த #metoo ஹேஷ் டேக்கையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்தியா :

1 வது இடம் – எதில் வருகிறதோ இல்லையோ, பெண்களுக்கு ஆபத்து விளைவிப்பதில்
இந்தியா முதலிடம்.

இந்தியாவில் ஒரு நாளைக்கு 106 பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். அதில் 10ல் நான்கு பருவ வயதை அடையாத குழந்தைகள். இது சட்டப்படி நடவடிக்கை எடுத்த கணக்கெடுப்பு மட்டுமே இது.

நிஜத்தில் இதைவிட இருமடங்கு அதிகம். இப்படியான விஷயங்களை வெளியே யாருக்கும் தெரியாமல் பெற்றோர்கள் மூடி மறைத்துவிடுவதால், அவர்களைப் பற்றி விவரங்கள் எதுவும் தெரிவதில்லை என்று மருத்துவமனைகளில் பணிபுரிபவர்கள் கூறுகின்றனர்.

ஆஃப்கானிஸ்தான் ;

2 வது இடம் – இரண்டாவது இடம் இந்த நாட்டுக்கு பாலியல் கொடுமைகளும்
பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளும் மிக அதிகம் இங்கு. ஆஃப்கானிஸ்தானில்
பெண்கள் கற்பழிக்கப்பட்டால் அவர்களை கௌரவக் கொலை என்ற பெயரில் கொன்றும்
விடுகிறார்கள்.

சிரியா :

3 வது இடம்- சிரியாவின் போருக்குப் பின் அங்கு ஆயிரக்கணக்கில் பெண்களும்,
குழந்தைகளும் கற்பழிகப்படுகின்றனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டால் அவர்களை கல்லால் அடித்துக் கொல்வதும், மிகச் சிறிய வயதிலேயே திருமணம் செய்ய வைப்பதுமாக கொடுமைகள் நடைபெறுகின்றன.

சொமாலியா :

4 வது இடம் -சொமாலியா படிப்பறிவில்லாத நாடு, கடந்த இருபதாண்டுகளாகவே போர்
தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களை துன்புறுத்துவது அங்கே சகஜமாக இருக்கும்.

சவுதி அரேபியா :

5 இடம்- சவுதி அரேபியா 5 வது இடத்தில் உள்ளது. முன்பு வரை பெண்களின் உயர்வு
சற்று முன்னேற்றம் கண்டுள்ளதாக அந்த நாட்டின் அரசு கூறினாலும், அங்கு பெண்கள்
வாகன ஓட்டுவதில் உள்ள தடையை அகற்ற போராடிய பெண் போராளிகளை கைது
செய்வதிலிருந்து இன்னும் அங்கு நிறைய செய்ய வேண்டியிருக்கிறது.

பாகிஸ்தான் :

6 வது இடம்- பாகிஸ்தானிலும் கலாச்சாரம், மற்றும் பண்பாடு என்ற பெயரில் பெண்களை வன்கொடுமை செய்து கொண்டு வருகிறது. இதை பண்பாடாக பார்ப்பதுதான் கொடுமை.

காங்கோ :

7 வது இடம் – தினமும் 1000 பெண்களாவது அங்கு கற்பழிக்கபடுகிறார்கள். அங்கு நடந்த போருக்கு பிறகு, நரகம் சூழ்ந்த நாடு என்று காங்கோவைச் சொல்கின்றனர்.

ஏமன் :

8 வது இடம்- ஏமன் நாட்டிலும் பெண்களை அடிமைப்படுத்துவதை கலாச்சாரமாக
செயல்பட்டு வருகின்றது. , பெண்களை சிறு வயதிலேயே மணம் செய்ய வைப்பது,
அடிமைப் போல் படிப்பில்லாமல் அவர்களை வேலிய வாங்குவதை அவர்களின் பண்பாடாக கருதுகின்றனர்.

நைஜீரியா :

9 இடம்- நைஜீரியாவில் பாலிய வங்கொடுமைகள் அதிகம். பெண்களுக்கு கலாச்சர பழக்க வழக்கம் என்ற பெயரில் துன்புறுத்தலும் அதிகமாக நடைபெறுகின்றது.

 

அமெரிக்கா :

10 அது இடம்- மேற்கத்திய நாடுகளில் பெண் வன்கொடுமைகள் அதிகம் நடக்கும் 10
நாடுகளில் அமெரிக்கா மட்டும்தான் இடம் பெற்றுள்ளது. #metoo மற்றும் #timesup போன்ற ஹேஷ் டேக்கினால் உலகிற்கு தெரிய வந்துள்ளதால், அமெரிக்கா இதில் 10வது இடம் பெற்றுள்ளது.

SHARE