நைஜீரியாவில் ரூ. 1.5 கோடியை கொள்ளையடித்த குரங்கு கூட்டம்!

0
150

திருட்டு, கொலை, கொள்ளை என மனிதர்களிடமிருந்து சகலத்தையும் கற்றுகொண்டிருக்கிறது விலங்குகள். நைஜீரியாவில் குரங்கு கூட்டம் ரூ. 1.5 கோடியை கொள்ளையடித்ததாக போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chimp with cash

ரூ. 1.5 கோடி இந்திய பணமதிப்பு கொண்ட சுமார் எழுபது மில்லியன் நைராவை குரங்கு கூட்டம் ஒன்று கடத்திச் சென்றதாக நைஜீரியா போலீசாரிடம் புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்புகார் குறித்து போலீசார் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர். குரங்கு கூட்டத்தை எப்படி கைது செய்வது? அது கொள்ளையடித்த பணத்தை எப்படி தேடி கண்டுபிடிப்பது? என தலைசுத்தி போயிருக்கின்றனர்.

இதையடுத்து, சமீபத்தில் அதே நாட்டில் மலைப்பாம்பு ஒன்று 36 மில்லியன் நைராவை விழுங்கியதாக இன்னொரு பரபரப்பு புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வினோதமான இப்புகார்களை அந்நாட்டு மக்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்