கும்பகோணத்தை பற்றி யாரும் கேள்விப்படாத 60 ரகசியங்கள்!

0
10610

கோயில் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணம் மிக முக்கிய நகரமாக கருதப்படுகிறது. இங்கு சைவ, வைணவ கோயில்கள் அதிகம் உள்ளது. கும்பகோணத்தில் மகாமகம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. அதுமட்டுமில்லாமல் பல ரகசிய சிறப்புகளையும் தன்னுள் கொண்டுள்ளது கும்பகோணம். அதைப் பற்றியே நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.

  1. கும்பகோணத்திற்கு குடந்தை என்ற பெயரும் உள்ளது. குடந்தை என்பது குடமூக்கு ஆகும். பின்நாளில் குடமூக்கு என்பது மறுவி குடந்தை என்று பெயர் பெற்றது.

2. குடந்தை என்ற சொல்லுக்கு வளைவு என்ற பொருள் உள்ளது. முக்கிய நதிகளில் ஒன்றான காவிரி கும்பகோணம் வந்து வளைந்து செல்வதாலும் குடமூக்கு என்ற பெயரும் உருவானதாக சொல்லப்படுகிறது.

3. முக்கிய நாதிகளான காவிரி கங்கை யமுனை சரஸ்வதி நதிகள் எல்லாம் கும்பகோணத்தில் உள்ளது என்று திருநாவுக்கரசர் பாடி பெருமை சோர்த்துள்ளார்.

4. சோழ மன்னர்கள் கும்பகோணத்தையே பாதுகாப்பான நகரம் என்று தங்கள் கருவூலத்தை இங்கு அமைத்தனர்.

5. சூத முனிவர் என்ற முனிவர் சிவரகசியம் என்ற நூலை உலகில் உள்ள மற்ற முனிவர்களுக்கும் எடுத்துரைத்தார். அந்த சிவரகசியம் என்ற நூலில் கும்பகோணம் பற்றி தெரிவிக்கப்பட்டியிருக்கும்.

6. உலக உயிர்கள் கெட்ட வினையிலிருந்து நீங்கிட மோட்சம் பெற கும்பகோணம் தலத்திற்கு சக்தி உள்ளது. இதனை சிவபெருமானே அருளியுள்ளார்.

7. கும்பகோணத்தில் உள்ள மாந்தாதா என்ற அரசன் கும்பலிங்கத்தை வைத்து பூசை செய்ததான் பலன் அவர் உலகின் பல்வேறு இடங்களையும் ஆட்சி செய்து சக்ராதிபதியாக விளங்கினார் என்று வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

8. மாளவ நாட்டு வேந்தன் சத்திய கீர்த்தி பிராமணர் ஒருவரை கொன்ற பாவத்திற்காக இங்குள்ள காசிப தீர்த்தத்தில் நீராடி அந்த பாவத்தை போக்கினார்.

9. சந்திரன் கும்பகோணம் சோமலிங்கத்துக்கு அர்ச்சனை செய்து நோயில் இருந்து விடுப்பட்டார்.

10. குபேரன் கும்பகோண தலத்தை வணங்கிய பிறகு குபேரபுரிக்கு தலைவன் ஆனான்.

11. திருமால் இத்தலத்தில் பூசை செய்து வைகுண்ட பேரு அடைந்தார்.

12. தட்சன் யாகத்திற்கு சென்ற தேவர்கள் துன்பத்தினை சந்திக்க நேர்ந்தது. உடனே அவர்கள் கும்பகோணத்தில் உள்ள இறைவனை வழிப்பட்டதும் துன்பம் விலகிப்போனது.

13. சூரியனின் ஒளியை அழிக்கும் படி மயனை அவன் மனைவி தூண்டினால். சூரியனும் மயனால் ஒளியை இழந்தான். பிறகு சூரியன் கும்பகுாணத்தில் வந்து பெருமாளை வணங்கியாதால் மீண்டும் ஒளி பெற்றான்.

14. வானவர்களும் பெறாத மகத்துவத்தைக் கும்பகோணத்தில் வழிபாடு செய்வர்கள் பெறலாம் என்ற ஐதீகம் உள்ளது.

15. பவிஷ்யோத்ர என்ற வடமொழியில் உள்ள புராணத்தில் கும்பகோணத்தின் மகாமக மகிமை பற்றி சொல்லப்பட்டுள்ளது.

16. யாழ்ப்பாணத்தை சேர்ந்த முருகேசன் பிள்ளை குடந்தை சிலேடை வெண்பா பாடியுள்ளர்.

17. காசியைப் போலவே கும்பகோணத்திலும் எட்டுத்திசைகளில் எட்டு பைரவர்கள் காக்கின்றனர். இங்கு தான் ஞானம்பிகையுடனான பைரவேசர் கோவில் உள்ளது.

‘18. சேதுவில் காசியில் செய்பெரும் பாவம் கோதிலாக் கும்பகோணத்தில் தீரும்’ என்ற கும்பேசர் குறவஞ்சியில் காசியிலும் நீங்காத பாவம் கும்பகோணத்தில் தீரும் என்றுள்ளார்.

19. கும்பகோணத்தில் பெருமையாக மகாமகம் குளம் 15 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் லட்சகணக்கில் மக்கள் நீராடுகின்றனர்.

20. சூரியனுக்கு நேர் எதிராக குருவும் சந்திரனும் இருக்கும் கிரக நிலையில் இந்த மூன்று கிரகங்களும் ஒன்று சேரும் இடமாக மகாமக குளம் உள்ளது. அதனால் புத்திர பாக்கியம் செல்லம் என அனைத்தும் தரும் இடமாக உள்ளது.

21. மகாமகம் குளத்தில் நீராடிய அரசர்கள் பொன், பூமி, கன்னிகை, வஸ்திரம், பசு, குதிரை, காளைமாடு, அன்னம், தென்னை, குப்ததானம், சந்தனம், முத்து, நவரத்தினம், தேன், உப்பு, பழங்கள் எனப்படும் 16 தானங்களைச் செய்தார்கள். இந்தத் தானங்கள் எப்படிச் செய்வது என்ற விவரம் குளக்கரையைக்கு அருகே உள்ள தான மண்டபங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

22. ராஜகேசரி என்ற என்ற சோழ அரசனுடைய கல்வெட்டில் மாகமகம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் ராஜராஜ சோழனுக்கும் முற்பட்ட அரசன்.

23. மாகமக வருடம் தொடங்கியதிலிருந்து அதாவது சிம்மகுரு காலத்தில் உள்ள நாட்களிலும் புனித நீராடலாம் அதிலும் குறிப்பாக மாசி மாதத்தில் நீராடுவது மிகவும் விசேஷம்.

24. மாசி மாத மகம் நட்சத்திர நாள், சித்திரைப் பிறப்பு, கார்த்திகைச் சோமவார நாட்கள், அமாவாசை, பவுர்ணமி, சூரிய சந்திரகிரகண நாட்கள், உத்தராயனம், தட்சிணாயனம், விஷுபுண்ய காலம், கிருஷ்ணபட்ச அஷ்டமி, சிவராத்திரி, சுக்ரவாரம், கபில சஷ்டி ஆகிய நாட்களிலும் நீராடுவது மிகவும் நன்மை தரும்.

25. கும்பகோணத்தில் நுழையும் முன் பஞ்சக்குரோசத் தலம் மற்றும் அஷ்டாதசத் தலத்தையும் தரிசப்பது கூடுதல் நம்மை வந்து சேரும்.

26. மாசிமக நீராடலைப் பிதுர் மகா ஸ்நானம் என்று மாகபுரண அம்மானை நூல் கூறுகிறது. இதற்கேற்ப மாசி மகத்தன்று இறந்தவர்களுக்கு பித்ருகடன் தீர்க்க எள்ளும் நீரும் கொடுக்கும் சடங்கு நடைபெறுகிறது.

27. மாசி மகத்தன்று விரதமிருந்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் ஆண்சந்ததி உண்டாகும் என்ற நம்பிக்கையுள்ளது.

28. மாசி மாதம் முழுவதுமே புண்ணிய நீராட ஏற்ற நாளக உள்ளது.

29. பிரம்மா தான் மகாமக விழாவை முதன் முதலில் துவங்கி வைத்தார்.

30. மாகமகக் கிணறு என்னும் சிம்மக் கிணறு திருக்கோஷ்யூரில் உள்ளது. இதுவும் சிறப்பு மிக்கதாகும். மாசிமகத்தன்று தெப்பத்திருவிழாவில் வேண்டுதல் நிறைவேறியவர்கள் தெப்பக்குளத்தில் தீபமேற்றி வழிப்படுது சிறப்பாகும்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்