பெண்கள் மட்டும்: மென்சஸ் கப்பை உபயோகிப்பது, பராமரிப்பது எப்படி?

  0
  15403

  விதிமுறைகள்:

  1. மென்சஸ் கப்பை உடலுறவின்போது அணிவது கூடாது.
  2. ஒருவர் மட்டுமே பயன்படுத்தக்கூடிய சாதனம் இது.
  3. ஒருமுறை பயன்பாட்டுக்குப் பிறகு கப்பை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து, சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
  4. டிஸ்யூ பேப்பரைக் கொண்டு கப்பை சுத்தம் செய்ய வேண்டும்.
  5. கப்பின் மேல் பகுதியில் உள்ள குழாயில், அடைப்பு ஏதேனும் இருந்தால் நீரை பீய்ச்சியடித்து அல்லது பல் குத்த உதவும் குச்சியை கொண்டு அகற்றலாம்.
  6. கப்பில் தொற்று பரவுவதை தடுக்க, 3 முதல் 5 நிமிடங்கள் வரை நீரில் கொதிக்க வைக்கலாம்.

  மென்சஸ் கப்பின் நன்மைகள்:

  • இதில் இரசாயனன்களோ வாசனைப் பொருட்களோ கலக்கப்படவில்லை.
  • 12 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும்.
  • உறுப்புக்குள் உள்ள பாகங்களில் இறுக்கப் பிடித்துக் கொள்ளாது.
  • நாப்கினை விட இது அதிகமாக திரவத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது.
  • எளிதாக கழுவலாம், தொற்று நீக்கலாம். துர்நாற்றம் வீசாது.
  • உடலுக்குள் வறட்சியை ஏற்படுத்தாது.
  • டேம்பன்களில் ‘டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம்’ என்ற அபாயம் உள்ளது. ஆனால் மென்சஸ் கப்பில் அது இல்லை.
  • சருமத்தில் எவ்வித ஒவ்வாமை பிரச்சினைகளும் ஏற்படாது.
  • ஒரு முறை மட்டும் நீங்கள் செலவு செய்து வாங்கிவிட்டால் 3 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும்.

   

  சில பிரச்சினைகள்:

  • மென்சஸ் கப்பை பயன்படுத்த பயிற்சிகள் தேவைப்படுகிறது.
  • திருமணமாகாத பெண்களுக்கு மட்டும் இதை உபயோகிப்பது சற்று கடினமாக இருக்கலாம். இறுக்கமாக உணர்வார்கள்.
  • சிலருக்கு ரத்தக் கழிவுகளை பார்ப்பது அருவருப்பானதாக இருக்கலாம்.
  • இதை உபயோகிக்க அதிக பொறுமை தேவைப்படுகிறது. மிகுந்த கவனத்துடன் மட்டுமே கையாளக்கூடிய சாதனம் இது.

  இந்த கட்டுரை உங்களுக்கு உபயோகமாக இருந்தால் உங்களது தோழிகளுக்கும் இதை உடனடியாக பகிர்ந்து உதவவும்.

   

  ஜாதகத்தில் Govt Job , TNPSC, IAS வேலை யாருக்கு கிடைக்கும்

  உங்க கருத்தை தெரிவிக்கலாம்