காவிரிக்காக போர்க்களமானது அண்ணாசாலை.. ஸ்டேடியம் ‘வெறிச்’!

0
430

காவிரி நதிநீர் பங்கீட்டு உரிமையை மீட்டெடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள சூழலில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டியை தடுத்து நிறுத்த முயன்ற பல்லாயிரக்கணக்கான புரட்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மிகப்பெரிய களேபரம் நடக்க அண்ணாசாலையே போர்களமாக காட்சியளித்தது. இப்போராட்டத்தை முன்னின்றி இயக்கிய திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், அமீர், வெற்றிமாறன், கவுதமன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான போராளிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சீமானுடன் இணைந்து அவரது நாம் தமிழர் கட்சியினர் களத்தில் இறங்கியிருந்தனர். மேலும் பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை போலீசார் சூழ்ந்துள்ளதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

புகைப்படங்கள்:

உங்க கருத்தை தெரிவிக்கலாம்