பாதங்களில் தோல் கிழிந்து ரத்தமும் சதையுமாக நடந்த விவசாயிகளுக்கு மிகப்பெரிய வெற்றி!

பாதங்களில் தோல் கிழிந்து ரத்தமும் சதையுமாக சாலையெங்கும் கொட்டுகிறது. அதை சற்றும் கண்டுகொள்ளாமல் உறுதியுடன் பேரணியில் நடைபோடுகிறார் அந்த விவசயாப் பெண்மணி. ஒருவர் இருவர் அல்ல இப்பேரணியில் ஈடுபட்டிருந்த ஐம்பதாயிரம் பேருக்கும் மனதில் தீரா வலி. 6 நாட்களுக்கு முன் நாசிக்கில் இருந்து தொடங்கிய விவசாயிகள் பேரணி மகாராஷ்டிராவின் சட்டமன்றத்தை முன்றுகையிட்டது.

கடந்த 3 நாட்கள்தான் இவர்கள் மீது மீடியாக்களின் கவனம் பாய்ந்தது. ஊடகத்தில் இருந்து மக்களிடம் செல்லும் வரை தனி இனமாக நடந்து போராடியுள்ளனர் நமது விவசாயிகள்.

களத்தில் இறங்கி பீடுநடை போட்ட தாதாக்களும், பாட்டிகளும் மயங்கி மயங்கி விழுந்தனர். பலருக்கும் சர்க்கரை, இரத்த அழுத்தம். வேளாவேளைக்கு உணவுகள் வழங்கப்பட வேண்டும். குடிநீர் வழங்கப்பட வேண்டும்.

உணவுகளுக்கும், தண்ணீருக்கும், மருந்துகளுக்கும் மட்டுமே பல லட்சங்கள் செலவாகியிருக்கின்றன. மக்கள் தாங்களாகவே முன்வந்து விவசாயிகளுக்கு உணவுகள் வழங்கினர்.

செல்லும் பாதையெல்லாம் நீர் – மோர் பானங்கள் வழங்கினர். உடல் நலியுடன், அவர்களுக்கு சொந்த நட்டமும் கூட ஏற்பட்டிருக்கிறது. விவசாய நிலங்களை விட்டு வந்து சாலையில் போராடியதால், ஒவ்வொரு விவசாயிக்கும் ஐம்பதாயிரம் வரை நட்டம் ஏற்பட்டிருக்கிறது.

விவசாயப் பெருஞ்சாபம் மகாராஷ்டிரத்தை ஆளும் பா.ஜ.க. அரசை ஒரு உலுக்கு உலுக்கியது. விளைவாக, இறுதியில் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகளில் பெரும்பான்மையான கோரிக்கைகளை முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் ஏற்றுக்கொண்டுவிட்டதாக அறிவித்துள்ளார். விவசாயிகள் மாபெரும் வெற்றி அடைந்துள்ளனர்.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்