எல்லா பாவங்களில் இருந்தும் விடுவிக்கும் சந்திர கிரகண வழிபாடு!

0
14901

நிகழும் ஹேவிளம்பி வருடம் தை மாதம் 31ம் தேதி புதன் கிழமை (31-01-2018)ம் நாள் மாலை 06:21 மணி முதல் இரவு 07:37 மணி வரை முழு சந்திர கிரகணம் இருக்கும். 07:37 மணியில் இருந்து நிழல் விலக ஆரம்பித்து 08:41 மணிக்கு முழுமையாக விலகி விடும். இருப்பினும் இரவு 09:38 மணிக்கு பிறகே நிலவு அதன் முழு ஒளியுடன் திகழும்.

கோடி மடங்கு பலன் தரும் சந்திர கிரகண மந்திரம்!சந்திரனுக்கே தோஷம்:
புராண அம்சங்களின் படி, சந்திரன் செய்த பாவத்தால் அவருக்கு ராகு தோஷம் ஏற்படுகிறது. இதனால் ராகு என்னும் பாம்பு அவரைப் பிடித்து முடமாக்க நினைக்கிறார். எனவே சந்திர பகவான் ஆண்டவனை பிராத்தித்து மந்திரங்கள் சொல்ல, அவருக்கு ராகு தோஷம் நீங்குகிறது. சந்திர கிரகணத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஈரேழு லோகத்தில் உள்ள முனிவர்களும், தேவதைகளும் அந்நேரத்தில் மந்திரங்கள் சொல்லி ஆண்டவனை துதிப்பார்கள். இதனால் தோஷம் நிவர்த்தி ஆகும் என்பது நம்பிக்கை.

பரிகாரங்கள்:
கிரகண தோஷத்தில் இருந்து விடுபட, நவக்கிரக துதியை பாராயணம் செய்யலாம். அல்லது சிவன் அல்லது விஷ்ணு மந்திரங்களை பாராயணம் செய்யலாம். இதுபோல சந்திர கிரகணத்திற்கான துதியை பாராயணம் செய்து இறைவனை வழிபடலாம். கிரகணம் விடும்போது குளித்துவிட்டு ஆலய தரிசனம் செய்ய வேண்டும். ஆலயத்தில் உள்ள நவக்கிரக சன்னதியில் நெய் தீபம் ஏற்றி சந்திரனை வழிபட்டால் வாழ்வில் நீங்கள் செய்த எல்லா பாவங்களுக்கும் விமோச்சனம் கிடைக்கும். எல்லா கஷ்டங்களும் தீரும்.

பித்ரு தர்ப்பணம்:
கிரகணம் முடிந்ததும் நமது முன்னோர்களின் பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் சிறப்பானது ஆகும்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்