25 வயதில் காதல் வந்தால் சரி! 15 வயதில் வந்தால் தவறா? – உண்மை காதல் கதை!!

நான் அப்போது 11 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்களது பள்ளியில் இருந்து நாங்கள் ஒரு சுற்றுலா சென்றோம். அந்த சுற்றுலாவிற்காக தான் அந்த வருடம் முழுவதுமே காத்துக் கொண்டிருப்பது போல இருக்கும். அந்த சுற்றுலாவில் நான் பலருடன் நன்றாக பேசிப் பழகினேன்..

அப்போது அறிமுகமான பெண் தோழிகள் தான், விஷாகா மற்றும் சுதா.. பலருடன் நன்றாக பேசிப் பழகியிருந்தாலும் கூட, விஷாகாவும், சுதாவும் எனக்கு மிக நெருக்கமான தோழிகளாகினர். ஆனால் இவர்கள் இருவரும் என்னுடைய ஜூனியர் பெண்கள். சுற்றுலா இவர்களுடன் நல்ல படியாக முடிந்து, பள்ளி வாழ்க்கைக்கு திரும்பினோம்.

எனக்கு விஷாகா மற்றும் சுதாவுடன் பள்ளியில் வந்து எப்போதும் போல பேசுவதற்கு தயக்கமாக இருந்தது. யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்.. நண்பர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்து குழம்பினேன்..

எனவே அவர்களை எதிரில் பார்த்தால் கூட சின்ன இரகசிய புன்னகையுடன் சென்று விடுவேன்.. நான் ஏன் அவர்களுடன் பேச தயக்கம் காட்டுகிறேன் என்பது அவர்களுக்கு புரிந்ததா இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை.

.

ஒருநாள் விஷாகா, சுதாவின் மூலமாக ஏன் என்னுடன் பழைய மாதிரி பேசுவதில்லை என்று கேட்டு சொல் என்றாள். சுதாவும் வந்து விஷாகா இப்படி கேட்டாள் என்று கூறினாள். நான் காரணம் கூறினேன்.

பின்னர் நாங்கள் எப்போதாவது சாட் செய்து கொள்வோம்.. எனக்கு விஷாகாவை பிடித்திருந்தது. அதனை சுதா மூலமாக சொல்லி அனுப்பினேன்.. சுதா சொன்னாலா இல்லையா என்று தெரியவில்லை.. ஆனால் கட்டாயம் சொல்லியிருப்பாள் என்று நம்புனேன்..

நாட்கள் கடந்தன.. எனக்கு மனதில் இருந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக தீர்ந்தது. சரி நாமே சென்று விஷாகாவிடம் சொல்லலாம் என்று சென்றேன். விஷாகாவிடன் எனக்கு உன்னை பிடித்திருக்கிறது என்று கூறினேன்.

அவள் அதனை பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை.. மௌனமாக நின்றாள்.. பின்னர் இது காதலிக்கும் வயது இல்லை.. உனக்கு இருப்பது வெறும் கிரஷ் தான்.. காலப்போக்கில் மறந்து விடும்.. அது போகப்போக சரியாகிவிடும் என்று கூறினாள்..

அவள் இது வெறும் கிரஷ் எல்லாம் காலப்போக்கில் மறந்து விடும் என்று கூறிய பின்னர் என்ன செய்வது என்று தெரியவில்லை.. அவளே இப்படி சொன்ன பிறகு அவளை மறக்க வேண்டும் என்று தான் தோன்றியது. பள்ளியில் கோடை விடுமுறையும் வந்தது.. நான் நிறைய பெண்களுடன் பேச ஆரம்பித்தேன்..

என்னை ஒருத்தி வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.. நாம் ஏன் நம்மை விரும்பும் பெண்களை விட வேண்டும் என்று நிறைய பெண்களுடன் பேச ஆரம்பித்தேன்.. அவளை மறக்க வேண்டும் என்றே இதனை எல்லாம் செய்தேன்.. அதற்காக நான் செய்தது சரி என்று சொல்லவில்லை.. தவறு தான்..

கோடை விடுமுறை எல்லாம் முடிந்து பள்ளிக்கு செல்லும் காலம் வந்தது.. எனக்கு என்ன தான் நிறைய பெண்களுடன் பேசினாலும் கூட, அவளை கண்டதும் அத்தனை பேரும் மறந்து போய் விட்டனர். அவளை மட்டுமே பிடித்திருந்தது..

ஆனால் அவளோ அதனை கிரஷ் என்று கூறுகிறாள்.. சுதா ஒரு நாள் என்னிடம் வந்து நீ ஏன் இப்போது எல்லாம் விஷாகாவிடம் பேசுவதே கிடையாது என்று கேட்டாள்..

அப்போது தான் எனக்கு தோன்றியது… ஆமாம் நாம் தான் அவளுக்கு மெசேஜ், மெயில், போன் கால் என எதுவுமே செய்வது கிடையாது என்று.. நான் அதனை நினைத்து வருந்தினேன்.. அவள் இது வெறும் கிரஷ் என்று கூறிய பிறகு நான் என்ன செய்வேன்.. அதனால் தான் அவளுடன் பேசுவதில்லை..

ஆனால் அவளை நான் நினைக்காத நாளே இல்லையே.. இது கிரஷ் என்றால் காலப்போக்கில் அதுவே மாறிவிடட்டும் என்று, அவளுடன் நான் பேச தயார்.. அவள் என்னுடன் பேசுவாளா? என்று கேட்டேன்.. அவள் பச்சைக் கொடி காட்டினாள்..

எங்களது நட்பு மிகவும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது.. அப்போது என் நெருங்கிய நண்பனுக்கும் எனக்கும் இடையே பெரிய பிரச்சனை வந்தது.. அவன் என்னை பற்றி தேவையற்ற வதந்திகளை பரப்பிக் கொண்டிருந்தான்.. அது விஷாகாவின் காதுக்கும் சென்றது.. ஒருவர் சொன்னால் பரவாயில்லை.. நிறைய பேர் அவளிடம் ஒரே மாதிரியாக சொன்னால் அவளும் எப்படி நம்பாமல் இருப்பாள்..

எனது நண்பன் நான் விடுமுறையில் பல பெண்களுடன் பேசியதை எல்லாம் அதிகமாக சித்தரித்து என்னை ஒரு ப்ளே பாய் போல பள்ளி முழுக்க சொல்லிவிட்டான்.. நான் அந்த அளவுக்கு கெட்டவன் எல்லாம் கிடையாது..

இந்த காரணத்தால் மீண்டும் விஷாகா என்னுடன் பேசவில்லை.. நான் எப்படியோ எனது நண்பர்கள், அவளுடைய தோழிகள் மூலமாக என் பக்கம் இருக்கும் நியாயத்தை அவளுக்கு தெரிய செய்து விட்டேன்.. என்னை அவளுக்கு புரிய வைத்து விட்டேன் என்ற திருப்தி மட்டும் எனக்கு இருந்தது..

என்னால் அவளை மறக்கவே முடியவில்லை.. அவள் மீது எனக்கு இருந்தது வெறும் கிரஷ் தான் என்றால் அவளை நான் எப்போதோ மறந்திருப்பேனே.. ஆனால் என்னால் ஏன் மறக்க முடியவில்லை…?

எனக்கு அவளுடன் பேசாவிட்டாலும் கூட அவளது நியாபகமாகவே தான் இருக்கிறது. எதிலும் அவளது நியாபங்கள் தான்.. 12 ஆம் வகுப்பு தேர்வு ஒரு புறம் இருக்க, இதை எல்லாம் விட்டுவிட்டு, படிப்பை பார்க்கலாம் என்று தோன்றினாலும், அவளை மறக்க முடியவில்லை..

தேர்வு முடிந்தது… நான் கல்லூரிக்கு செல்ல போகிறேன்.. எனக்கு 17 வயது.. அவளுக்கு 15 வயது.. இந்த வயதில் வருவது எல்லாம் காதல் இல்லை என்று தான் கூறுகிறார்கள்.. 25 வயதில் வந்தால் அந்த காதலை கொண்டாடி திருமணம் செய்து வைக்கிறார்கள்.. ஆனால் 17 வயதில் வரும் காதலை திட்டி தீர்க்கிறார்கள்..

எது எப்படியாக இருந்தாலும், அவள் இதனை கிரஷ் என்று சொன்ன பின்னர் என்னால் மீண்டும் அவளிடம் இதை பற்றி இந்த வயதில் பேச போவது கிடையாது.. அவள் வேறு பள்ளிக்கு போக போகிறாள்.. நான் கல்லூரிக்கு செல்ல போகிறேன்.. இறைவன் நாங்கள் சேர வேண்டும் என்று நினைத்தால், அவளுக்கு என் மீது வருங்காலத்திலாவது காதல் வந்தால் நான் நிச்சயம் அவளை கைவிட மாட்டேன்… அவளுக்காக காத்திருப்பேன்!

SHARE