ஆண்களே… பெண்களிடம் இந்த 5 விஷயங்களில் ரொம்ப கவனமா இருங்க ப்பா!

0
9120

கணவன்-மனைவி என இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல், வாழ்ந்தீர்கள் என்றால் உங்களுடைய இல்வாழ்க்கை இனிமையாக அமையும். அதற்கு முன்பாக இருவரிடையேயும் ஒரு புரிதல் அவசியமாகிறது. ஒரு பெண்ணை ஆண் புரிந்துகொள்ள முடியாது என்றாலும், அவள் தங்களிடம் என்னென்ன எதிர்பார்ப்பாள்? என்பதை புரிந்துகொண்டு நடக்க முடியும். அதைதான் இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

முதலில் ஒரு ஆண் எக்காரணத்தைக் கொண்டும் எந்த வகையிலும் பெண்ணை கேலியோ, கிண்டலோ செய்யக்கூடாது. இது ஆணின் உள்மனதில் உள்ள ஈகோவை, அவர்களை அறியாமலே மறைமுகமாக வெளிப்படுத்துவதற்கான அறிகுறியாம்.

ஆணாகப்பட்டவன் தான் செய்த தவறை நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பெண்கள் உங்களை எப்போதும் நம்பவே மாட்டார்களாம். குறிப்பாக ஆண்களின் அடிக்கடி சொல்லும் ‘நான் செய்யவில்லையே’ என்ற வார்த்தையை வெறுக்கிறார்களாம்.

கிடைத்த நேரத்தில் எல்லாம், பெண்களின் அந்தரங்க உறுப்புகளை நோட்டம் விடுவதும் பெண்களுக்கு பிடிக்காதாம். தடையை மீறினால் குஷி பட ஜோதிகாவைப் போல வெறுப்பை தீயாக கக்குவார்களாம்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்