அட நம்ம லக்ஷ்மி மேனனா இது.. ஆளே மாறிட்டாங்களே!!

0
10081

‘கும்கி’யின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் லக்ஷ்மி மேனனுக்கு வாய்ப்பு கிடைத்தது. ‘கொம்பன்’, ‘குட்டிப்புலி’, ‘மஞ்சப்பை’, ‘ஜிகர்தண்டா’, ‘வேதாளம்’ என ட்ராக் பக்காவாக ஏறிக் கொண்டிருக்க, உடல் எடையும் கூடவே ஏறியது. ‘வேதாளம்’ படத்தில் தங்கை கேரக்டர் பேசப்பட்டாலும், ‘மிருதன்’, ‘ரெக்க’ படங்களில் இவரது ட்ராக் சரிந்து போனது. காரணமே உடல் எடை கூடியதுதான். அதன் பின் படங்கள் சரியாக அமையாத காரணத்தால் மீண்டும் கேரளாவுக்கே சென்றார்.

விளம்பரப் படங்களில் கூட வாய்ப்பை இழந்தவர் இப்போது திடீரென தனது ரீசன்ட் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மீண்டும் உடல் எடையை குறைத்திருக்கிறார். ‘சுந்தரபாண்டியன்’ படத்தில் அறிமுகமானபோது எப்படி இருந்தாரோ அப்படியே மாறியிருக்கிறார் லக்ஷ்மி மேனன்.

அட நம்ம லக்ஷ்மி மேனனா இது.. ஆளே மாறிட்டாங்களே!!

தற்போது ‘யங் மங் சங்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இனிமேல் தமிழ் சினிமா இயக்குநர்கள் மீண்டும் இவரது வீட்டுக் கதவை தட்டலாம் என கோடம்பாக்கம் பேசிக்கொள்கிறது.

ரஜினிகாந்த் நடித்து சூப்பர் ஹிட் அடித்த 1௦ பிறமொழி திரைப்படங்கள்!