கிட்னியில் கல் எப்படி உருவாகிறது? அதை எப்படி கரைக்கலாம்? என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும்?

  0
  3510

  நம் உடலில் உறுப்புகளில் சிறுநீரகம் மிகவும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. நமது உணவு பழக்கங்கள் மாறும் போது சிறுநீரகம் பாதிப்படைகிறது. சிறுநீரகத்தில் கல் உருவாகி பிரச்சனையை தோற்றுவிக்கும் எனவே சிறுநீரகம் சார்ந்த கவனம் மிகம் அவசியமான ஒன்றாக உள்ளது.

  சிறுநிரகத்தில் கல் உருவாகுவது எப்படி?
  நம் உடலில் உள்ள தேவையற்ற நீர் சிறுநீர்கத்தில் இருந்து வெளியேறுகிறது. அப்படி வெளியெறும் போது சிறுநீரகத்தில் உள்ள சவ்வில் சேரும் அதிகப்படியான கனிம சத்துகள் தான் சிறுநீரக கல்லாக உருவாகிறது. சிறு கற்களாக இருப்பின் இவை நமது சிறுநீர் வெளியேறும் போது சேர்ந்து வெளியேறிவிடும். இந்த கற்கள் பெரியராக இருப்பின் அவை சிறுநீரக பாதையில் தங்கி பிரச்சனையை ஏற்படுத்தும்.

  கல் இருப்பதற்கான அறிகுறிகள்:
  சிறுநீரக கல் உருவாகி இருப்பின் அதனை வெளிப்படும் அறிகுறிகள் கொண்டு அறிந்திடலாம். முதலில் சிறுநீரக பாதையில் எரிச்சல் ஏற்படும். இது தான் முதல் அறிகுறி. பிறகு சிறுநீர் நிறம் மாறும். அதன்பிறகு அடிக்கடி காய்ச்சல் அத்துடன் செரிமாணத்தின்போது ஏரிச்சலும் ஏற்படும். சில நேரங்களில் சிறுநீர் அதிகபடியான துற்நாற்றம் வீசும். நாளடைவில் முதுகுப் பகுதியில், அடி வயிற்றில் அதிகமாக வலி ஏற்படும்.

  காரணாமன உணவுகள்:
  பல இன்னல்களை தோற்றுவிக்கும் இந்த சிறுநீரக கல் உருவாகுவதற்கு மிக முக்கிய காரணம் நமது உணவு பழக்கம் தான். சரியான உணவுகளை எடுத்துக்கொள்ளாததும் ஒரு வகையான காரணமாகவும் உள்ளது. அதிகமாக காரம் உள்ள உணவு உட்கொள்ளும் போதும், புளிப்பு சுவை மிகுந்த உணவுகள் சாப்பிடுவதாலும், செரிமாணத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் உணவை சாப்பிடுவதாலும், இறைச்சி, முட்டை சார்ந்த பொருட்களை அதிகம் சாப்பிடுவது, குறிப்பாக அளவு குறைவான தண்ணீர் அருந்துவதும் சிறுநிரகத்தில் கல் உருவாக முக்கிய கரணிகளாக உள்ளன.

  உங்க கருத்தை தெரிவிக்கலாம்