கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது தாமரையா? கையா? – இந்தியா டுடே சர்வே!

0
764

கர்நாடகத்தில் வரும் மே மாதம் 12ம் தேதியன்று சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தின் ஆட்சி பீடத்தில் கால் மேல் கால் போட்டு உட்காரப்போவது யார் என இந்தியா டுடே சர்வே எடுத்துள்ளது. அதன் முடிவை இப்போது வெளியிட்டிருக்கிறது.

இந்த சர்வேயின் அடிப்படையில், காங்கிரஸ் கட்சி 120 முதல் 132 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சிக்கு 60 முதல் 72 தொகுதிகள் வரை வெல்லும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது என அந்த சர்வே கூறுகிறது.

காங்கிரஸ் வெற்றியை சுவைத்தாலும், இப்போது முதல்வராக இருக்கிற சித்தராமையா மீது அதிக ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதால் அவர் மீண்டும் முதல்வர் ஆவாரா? என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது. 29 சதவீத மக்கள் சித்தராமையாவின் செயல்பாடுகள் மோசம் என வாக்களித்துள்ளனர்.

வெறும் பத்து சதவீத மக்கள் மட்டுமே தற்போதைய ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என வாக்களித்துள்ளனர். இருப்பினும் பெரும்பான்மையான மக்களும் சித்தராமையாவுக்கு ஆதரவையே தெரிவித்துள்ளனர். குறிப்பாக தலித் மக்களும் சித்தராமையாவின் பக்கம் நிற்கிறார்கள். பாரதிய ஜனதாவின் எடியூரப்பாவுக்கும், குமாரசாமிக்கும் 20 சதவீதம் தலித் மக்கள் ஆதரவு அளித்தாலும் இவருக்கு வெற்றி வாய்ப்பு இல்லை.

சமீபத்தில் தனி மதமாக அறிவிக்கப்பட்ட லிங்காயத்துக்கள் பாரதிய ஜனதாவிற்கே ஆதரவை கொடுத்துள்ளன. அதே போல பிராமணர்களின் ஆதரவும் எடியூரப்பாவிற்கு கிடைத்திருக்கிறது.