காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விட மாட்டோம்… களத்தில் வாட்டாள் நாகராஜ்..!

0
3390

காவிரி மேலாண்மை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக-கர்நாடக எல்லையை அடைக்கும் போராட்டத்தை கன்னட அமைப்பு அறிவித்துள்ளது.

தமிழக கர்நாடக எல்லை நாளை அடைப்பு..!

பெங்களூர் பத்திரிகையாளர் சந்திப்பின் போது கன்னட சலுவளிக் கட்சியைின் தலைவர் வாட்டாள் நாகராஜ் செய்தியாளர்களிடம் கூறியது:

1924 ஆம் ஆண்டு முதல் காவிரி தண்ணீரை தமிழகத்துக்கு விட்டு கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் தமிழகம் அந்த தண்ணீரை சரியாக பயன்படுத்தாமல் கடலுக்கு செல்லும்படி வீணாக்குகிறது. நாங்கள் தண்ணீரை வழங்க மாட்டோம் என்று கூறவில்ல. உச்ச நீதி மன்ற தீர்ப்பின்படி தண்ணீரை வழங்க தயாராக உள்ளோம். ஆனால் வறட்சியான காலங்களில் கர்நாடக அணைகளிலேயே தண்ணீர் இல்லாவிட்டால் எப்படி தண்ணீர் தருவோம்? அணைகளில் தண்ணீர் இல்லாவிட்டாலும் தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டும் என்று தமிழகம் அடம்பிடித்தால், எப்படி வழங்க முடியும். உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்கிவிட்டால் கிருஷ்ணராஜ சாகர், ஹாரங்கி, ஹேமாவதி மற்றும் கபினி அணைகளை தமிழகத்துக்கு தாரை வார்த்துக் கொடுக்க முடியாது.

காவிரி மேலாண்மை வாரியம்:
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் அரசியல் நோக்கத்துடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று போராட்டங்களை நடத்திவருகின்றனர். இதற்கு மத்திய அரசு இணங்கக் கூடாது. தமிழக அரசியல் கட்சிகள் தான் கர்நாடக மக்களை போராட தூண்டி விடுகின்றனர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதை ஏற்க மாட்டோம். அவ்வாறு அமைந்தால் தொடர் போராட்டம் கர்நாடகாவில் நடத்தப்படும்.

தமிழக கர்நாடக எல்லை நாளை அடைப்பு..!

எல்லை அடைப்பு போராட்டம்:
காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழகத்தில் அ.தி.மு.க, தி.மு.க, பொதுமக்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழகம் முழுவதும் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முழுவதும் முழு அடைப்புக்கு  அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த போராட்டம் தேவையற்றது. அதனை எதிர்க்கும் வகையில் 5ம் தேதி அன்று கர்நாடக தமிழக எல்லைகளை அடைக்கும் போராட்டம் நடைபெறும். அப்பொழுது தமிழக வாகனங்களை கர்நாடகாவிலும், கர்நாடக வாகனங்களை தமிழகத்துக்கும் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

கமல், ரஜினி அனுமதிக்க மாட்டோம்:
ரஜினி மற்றும் கமல் இருவரும் காவிரி மேலாண்மை அமைப்பதற்கு வலியுறுத்தி வருகின்றனர். எனவே கர்நாடகவிற்கு எதிராக செயல்படும் ரஜினி மற்றும் கமல் இருவரையும் கர்நாடகத்துக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்