தமிழிசைக்கே அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர் அனுப்பிய ‘ஆண்டவர்’…!

0
2384

நடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். தமிழக அரசியல்வாதிகளை பிரித்து மேய்ந்து வருகிறார். மக்கள் நீதி மய்யத்தில் இணைந்திட பல்வேறு வியூகங்களிலும் ஊடகங்களிலும் அழைப்பு விடுத்து வருகிறார். குறிப்பாக கமலின் கீழ் பணியாற்றும் தொழில்நுட்பத் துறை அவரை விட வேகமாக களப்பணியாற்றி வருகிறது. ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி, மின்னஞ்சல் மூலமாகவும் கூட அழைப்புகள் பறக்கின்றன.

 

அவ்வாறு அனுப்பப்படும் அழைப்புகளில் ஒன்று தமிழக பா.ஜ.க. தலைவரான தமிழிசை சவுந்தரராஜனுக்கும் கிடைத்துள்ளதாம். கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யத்தில் இணைந்திடுமாறு தமிழிசைக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். பா.ஜ.க.வில் ஆள் சேர்க்க அக்கட்சி மிஸ்ட் கால் கொடுக்காதவர்களுக்கும் கூட உறுப்பினர் அட்டை வழங்கியது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்