ஜிமிக்கி கம்மல் ஷெரிலுக்கு கொட்டுது ‘டும் டும் டும்’…!

0
993

வைரல் பெண் ‘ஜிமிக்கி கம்மல்’ ஷெரிலுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

கேரளாவில் உள்ள காமர்ஸ் கல்லூரி மாணவிகள் ஆடிய ‘ஜிமிக்கி கம்மல்’ நடனம் கேரளா மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த வீடியோவை பார்த்துள்ளவர்களின் எண்ணிக்கை மட்டும் 6 மில்லியனை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது.

இந்த வீடியோ மூலம் அனைவரையும் கவர்ந்து இழுத்தவர் ஷெரில். ஜிமிக்கி கம்மலுக்கு பிறகு சூர்யா நடித்த ‘சொடக்கு மேல சொடக்கு’ பாடலுக்கும் நடனம் ஆடியிருந்தார். தமிழ் ஊடகங்களும் ஷெரிலை பேட்டிகள் எடுத்தன. ஆனால் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என ஒரே போடாக போட்டுவிட்டார். தனக்கு ஆசிரியர் பணியில் இருக்கத்தான் விருப்பம் என்றும் தெரிவித்தார்.

தற்போது ஷெரிலுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ப்ரஃபுல் டாமி என்பவரை ஷெரில் கூடிய விரைவில் கரம்பிடிக்கப் போகிறார். திருமண நிச்சயம் செய்யப்பட்ட புகைப்படத்தை ஷெரில் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.