ஜெயலலிதாவை ருத்ரதாண்டவம் ஆட வைத்த நடராஜன்… ஒரு த்ரில்லர் ஃப்ளாஷ்பேக்!

0
10532

அரசியலில் இருந்து முழுமையாக விலகப்போவதாக ஜெயலலிதா தன் கைப்பட எழுதிய ஏழு கடிதங்களை கருணாநிதி பகிரங்கமாக அம்பலப்படுத்தினார். இதற்கு சசிகலாவின் கணவர் நடராஜன் காரணமாக இருந்திருக்கிறார்.

அரசியலில் இருந்து விலகுவதாக ஜெ. எழுதிய '7 கடிதங்கள்'... பரபரப்பு தகவல்கள்!

ஏழு கடிதங்கள்:

1989ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்தது. ஜெயலலிதா தனது “எம்.எ.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன், அரசியலை விட்டு முழுமையாக விலகுகிறேன்” என்ற அர்த்தத்தில் ஏழு கடிதங்களை எழுதி, தனது நம்பிக்கைக்குரிய டிரைவரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். அதில் ஒரு கடிதத்தின் மீது சபாநாயகரின் முகவரி இருந்தது. மற்ற ஆறு கடிதங்களிலும் பத்திரிகை அலுவலகங்களின் முகவரிகள் இருந்தன. இதை கவனித்த ஜெயலலிதாவின் ப்யூன் ரகசியமாக போயஸ் கார்டனில் இருந்து நடராஜனுக்கு தொலைபேசியில் தெரிவித்துவிட்டார். ப்யூனுக்கு உள்ளே என்ன எழுதியிருக்கிறது என்று தெரியாது. முகவரி மேட்டரை மட்டும் சொல்லி நடராஜனை அலார்ட் செய்தார். அந்த ப்யூன் நடராஜன் நியமித்த ஆள்தான்.

அரசியலில் இருந்து விலகுவதாக ஜெ. எழுதிய '7 கடிதங்கள்'... பரபரப்பு தகவல்கள்!

நடராஜன் ஆடிய கேம்:

அன்று சசிகலா திருத்துறைப்பூண்டிக்கு ரயிலில் சென்றிருக்கிறார். சசிகலாவுக்கும் நடராஜனுக்கு வேதா நிலையத்திலேயே நிரந்தர அறை ஒன்று உள்ளது. சசிகலா இருக்கும்போதுதான் நடராஜன் அந்த அறையில் தங்குவார். சசி ஊருக்குச் சென்றிருந்ததால் நடராஜன் அங்கில்லை. ஆழ்வார்ப்பேட்டை, பீமன்னா தெருவில் உள்ள வீட்டில் இருந்தார். தகவல் அறிந்ததும், ஆட்களை அனுப்பி போயஸ் கார்டனில் இருந்து வந்த காரை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி அருகே நிறுத்தி அந்த 7 கடிதங்களையும் டிரைவரிடம் இருந்து பறித்தார்கள்.