காவிரியை மீட்க ரோட்டிலேயே உண்ணாவிரதம், உறக்கம், அரசு பணிகள் மேற்கொண்ட ஜெ.!

0
3551

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினைக்காக எம்.ஜி.ஆர். சமாதிக்கு முன்பாக அமர்ந்து நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வெற்றியும் பெற்றிருக்கிறார். அந்த நிகழ்வை இங்கே பதிவு செய்துள்ளோம்.

எம்.ஜி.ஆர். சமாதி:
ஜூலை 18, 1993, இடம் : சென்னை மெரினா எம்.ஜி.ஆர் நினைவிடம்
காலை 9.15 மணிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடற்கரையில் உள்ள எம்.ஜி. ஆர். சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து வணங்குகிறார். பின்னர் அவர் சமாதியின் முன் பகுதியில் நாற்காலியில் அமர்ந்து கொளுத்தும் வெயிலில் உண்ணாவிரதத்தை தொடங்குகிறார்.

ஓடிவந்த அமைச்சர்கள்:
முதல் அமைச்சர் உண்ணாவிரதம் இருக்கப்போகிறார் என்ற செய்தி, அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், கட்சி தொண்டர்கள் உள்பட யாருக்குமே தெரியாமல் இருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் உண்ணாவிரதத்தை தொடங்கியது எல்லோருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது. அதன் பிறகுதான் அமைச்சர்கள், அதிகாரிகள் அவசரம் அவசரமாக அங்கு சென்றனர்.

காவிரி நீருக்காக 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வெற்றியும் பெற்ற ஜெயலலிதா!

சுட்டெரிக்கும் வெயிலில்:
அமைச்சர்களும், அதிகாரிகளும் வரும் வரைக்கும் ஜெயலலிதா சுட்டெரிக்கும் வெயிலில் உட்கார்ந்து இருந்தார். பகல் 11 மணி அளவில் அங்கு பந்தல் போடப்பட்டது. பின்னர் அந்த பந்தலில் அமைக்கப்பட்ட தனி மேடையில் ஜெயலலிதா அமர்ந்தார். அனைத்து அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமான தொண்டர்களும் அங்கு கூடினார்கள்.

அரசு பணிகள்:
உண்ணாவிரத பந்தலில் அமர்ந்திருந்த முதலமைச்சர் ஜெயலலிதா அங்கு இருந்தபடியே அரசு ஃபைல்களை பார்த்தார். அவ்வப்போது தலைமைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமன், உள்துறை செயலாளர் மலைச்சாமி, சுகாதாரத்துறை செயலாளர் இன்பசாகரன் மற்றும் அதிகாரிகளை முதலமைச்சர் அழைத்துப் பேசினார். தமிழக கவர்னர் சி.ரெட்டி அப்போது புதுச்சேரிக்கு சென்றிருந்தார்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்