உயிரணுக்களின் எண்ணிக்கையை கூட்டும் நாவல் பழம்! அதன் இன்னும் பல அரிய மருத்துவ குணங்கள்!!

0
22

“சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?” என முருகன் ஔவையாரிடம் கேட்க, பொருள் புரிந்த அவ்வையார் “சுடாத பழம் தா” என்று சொன்னார்.

முருகன் மரத்திலிருந்து நாவல் பழத்தை பறித்து கீழே போட்டவுடன் மண்ணை ஊதி
அவ்வையார் தின்கிறார்.

“என்ன பாட்டி பழம் சுடுகிறதா?” என முருகன் சிரித்துக் கொண்டே கேட்கிறான். தமிழின் அழகை இந்த கதை உணர்த்தும். அப்படி தமிழரின் வரலாற்றில் இடம்பெற்ற நாவல் பழத்தின் நன்மைகள் சாதாரணமானது அல்ல. வியப்பை தருபவை.

நாவல் பழங்கள் பலவகைகள் இருக்கின்றன. சீமைப் பழம் என்று முட்டை வடிவத்தில் வரும். நாட்டுப் பழம் என்பது உருண்டையாகவும் மிகவும் சுவையாகவும் இருக்கும். நிறைய கிராமங்களில் குறிப்பாக யூனியன் அலுவலகங்களில் இந்த நாவல் மரங்களை காணலாம். கனிந்து விழுபவை அற்புதமான சுவை கொண்டவை.

சத்துக்கள் :

நாவல் மரத்தின் ஒட்டுமொத்த பாகங்களும் நன்மை தருபவை. கால்சியம், பாஸ்பரஸ்,
இரும்புச்சத்து, சோடியம், வைட்டமின் பி போன்ற சத்துகள் இதில் உள்ளன.

எலும்புக்கு பலம் :

இதில் உள்ள கால்சியம் எலும்புகளுக்கு பலம் தருவதுடன் உடலை உறுதியாக்கும்.
குழந்தைகள் மற்றும் பெண்கள் அடிக்கடி சாப்பிட்டால் எலும்பு பலம் பெரும்.

ரத்த சோகை :

இதன் இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும். அதோடு வயது வந்த பெண் குழந்தைகள் அடிக்கடி இதனை சாப்பிடுவதால் கர்ப்பப்பை வலுவடையும். சோர்வு உண்டாகாது.

ஆண்மை குறைபாடு :

ஆண்மைத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் பெற்றது. விந்தணுக்களின்
உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். இதனால் ஆண்கள் நாவல் பழங்களை சாப்பிடுவது
நல்லது.

இளமை:

க்யூமின் என்ற ஆல்கலாய்டு தோலில் சுருக்கம் விழுவதைத் தடுக்கும். இதன்மூலம்
வயதாவதைத் தள்ளிப்போடும். உடலில் புதிய செல்களைப் புதுப்பிக்கும் திறன் கொண்ட
ஆன்டிஆக்ஸிடென்ட் இதில் அதிகமாக இருப்பதால் இளமை கூடும்.

சிறுநீர்க் குறைபாடு :

நாவல் பழங்களை ஜூஸாக்கி வடிகட்டி அதிலிருந்து 3 டீஸ்பூன், சிறிது சர்க்கரை சேர்த்து இரண்டு நாள் காலை, மாலை இரண்டு வேளை குடித்து வந்தால் சிறுநீர் தொற்று குறையும், சிறு நீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், நீர்க்கட்டு போன்றவை சரியாகும்.

 

சர்க்கரை வியாதிக்கு நாவல் விதை :

நாவல் விதைகளை உலர்த்தி பொடி செய்து அதனை தினமும் ஒரு கிராம் அளவு
காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வந்தல சர்க்கரை வியாதி முழுவதும் கட்டுக்குள் இருக்கும்.

 

SHARE