ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை… சீறிப்பாய தயாராகும் காளைகள்!

0
7941

வரும் 2௦18 பொங்கல் விழாவில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டுக்காக காளைகள் இப்போது இருந்தே பயிற்சி பெறத் தொடங்கியுள்ளன. மதுரையின் பல்வேறு பகுதிகளில் காளைகளுக்கு நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை... சீறிப்பாய தயாராகும் காளைகள்!

போராட்டங்கள்:

ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி கடந்தாண்டு தமிழகம் முழுவதும் நடைபெற்ற தன்னெழுச்சி போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டத்தின் வெற்றியாக, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரிய பீட்டாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. அத்துடன் இந்த வலக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கும் மாற்றி உத்தரவிட்டது.

ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை... சீறிப்பாய தயாராகும் காளைகள்!

பீட்டா தோல்வி:

பீட்டா தனது வழக்கறிஞர்கள் படையுடன் உச்சநீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்க, தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரோத்தகி, அரசியல் சாசனத்தின் 29(1)வது பிரிவின் கீழ் ஜல்லிகட்டை பாதுகாக்க முடியும். மத்திய அரசைப் போல மாநில அரசுகளும் சட்டம் இயற்றுகிற அதிகாரத்தை கொண்டிருக்கிறது என வலுவான வாதங்களை முன்வைத்தார்.

ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை... சீறிப்பாய தயாராகும் காளைகள்!

அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்:

இந்த வாதத்தை தொடர்ந்து, தமிழக அரசு கொண்டுவந்த அவசர சட்டமானது மிருக வதை சட்டத்திற்கு எதிரானதா? இல்லையா? என்பது குறித்து ஆய்வு செய்ய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு உத்தரவிட்டதுடன், வழக்கை அவர்களிடம் மாற்றியது.

ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை... சீறிப்பாய தயாராகும் காளைகள்!

தடை இல்லை:

இப்போதைய நிலவரத்தின் படி ஜல்லிக்கட்டு மீது எவ்வித தடையுமே இல்லை என்பதால் வரும் 2௦18ம் ஆண்டு பொங்கல் விழாவிற்கு ஜல்லிக்கட்டு தடையின்றி நடக்கும்.

ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை... சீறிப்பாய தயாராகும் காளைகள்!

தயாராகும் காளைகள்:

காளைகள் இப்போது இருந்தே தயார் படுத்தப்படுகின்றன. காளைகளை திறமையாக கையாளக்கூடிய இளைஞர்களே அவைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றன. மதுரையில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி, சோழவந்தான், அவனியாபுரம், சமயநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் காளைகளுக்கு நீச்சல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

தமிழக மக்கள் ஆர்வத்துடன் ஜல்லிக்கட்டு காண காத்திருக்கிறார்கள்.

 

இந்த 9 உணவுகளை ஃப்ரிட்ஜில் வைக்கவே கூடாது!