சீரியல் கில்லரா தஷ்வந்த்? குலை நடுங்க வைக்கும் 4 காரணங்கள்!

0
62823

கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் 7 வயது கூட நிரம்பாத ஹாசினியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, அவளை குரூரமான முறையில் கொலை செய்த தஷ்வந்த், இப்போது அவரது தாயையும் அடித்துக் கொன்றிருக்கிறார். மும்பையில் பிடிபட்டு, போலீசாரிடம் இருந்து தப்பித்து ஓடியிருக்கிறார். இவ்வாறு அவர் செய்யும் அடுத்தடுத்த குற்றங்கள் அவரை சீரியல் கில்லராக காட்டுகின்றன. இதை ஊர்ஜிதப்படுத்தும் 4 காரணங்களை இங்கே பார்க்கலாம்.

தஷ்வந்த் தப்பியோடியது எப்படி? சினிமாவை மிஞ்சும் சம்பவம்!

காரணம் 1:

பணம் நிறைந்த குடும்பத்தில் பிறந்த தஷ்வந்த் சிறு வயதில் இருந்தே மிகவும் சொகுசாக வளர்ந்திருக்கிறார். எதையும் பணத்தால் அடைந்துவிட முடியும். பணம் இருக்கும் வரை எந்த குற்றங்களை வேண்டுமானாலும் மிக துணிச்சலாக செய்யலாம் என்ற எண்ணம் இவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

சீரியல் கில்லரா தஷ்வந்த்? பரபரப்பை கிளப்பும் 4 காரணங்கள்!

காரணம் 2:

பெற்றோரின் வளர்ப்பு சரியில்லை. குறிப்பாக தஷ்வந்தின் தந்தை சேகர் அளவு கடந்து செல்லம் கொடுத்து வளர்த்திருக்கிறார். தஷ்வந்துக்கு பண போதையை ஊட்டியதே சேகர்தான். தன் மகன் எவ்வித தவறுகளை செய்தாலும் சேகர் சற்றும் தட்டிக்கேட்டது இல்லை. தஷ்வந்த் சிறைக்குச் சென்றபோது, ஹாசினியின் பெற்றோரிடம் சேகர் ‘என் மகனை எப்படி வெளியே கொண்டு வருகிறேன் பார்’ என சவாலும் விட்டிருக்கிறார்.

சீரியல் கில்லரா தஷ்வந்த்? பரபரப்பை கிளப்பும் 4 காரணங்கள்!

காரணம் 3:

ஹாசினி வழக்கில் சிறைக்குச் சென்று வந்த பின்பு, வீட்டில் பெற்றோருக்கு முன்பாகவே போதைப்பொருட்களை மிக தைரியமாக பயன்படுத்தினார் தஷ்வந்த். ஏற்கெனவே அவர் போதைப்பொருட்களை பயன்படுத்தியதனால் தான் அவர் பல குற்றங்களை பகிரங்கமாக நடத்தியிருக்கிறார்.

தஷ்வந்த் தப்பியோடியது எப்படி? சினிமாவை மிஞ்சும் சம்பவம்!

காரணம் 4:

பண ரீதியாக திமிரின் உச்சத்தில் இருந்த தஷ்வந்த் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார். தந்தை சேகரின் குணம் தஷ்வந்தை அதிகமாகவே ஆக்கிரமித்திருக்கிறது. சொல்லப்போனால் தஷ்வந்த் ஒரு சீரியல் கில்லராக வளர்ந்திருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

[இந்த காரணங்கள் யாவும் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களில் பகிரப்பட்ட கருத்துக்கள் ஆகும். தனிநபர் தாக்குதலோ அல்லது கற்பனையோ இல்லை.]

 

இதையும் படிக்கலாமே!!

சனீஸ்வரர் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டுமா? இதை ஃபாளோ பண்ணுங்க!

டெபிட்/கிரெடிட் கார்ட் கட்டணங்கள் குறித்து புதிய அறிவிப்பு!

SHARE