சி.எஸ்.கே.வால் வாழ்க்கையை இழக்கும் 3 முக்கிய அணிகள்!

0
9683

இரண்டு ஆண்டுகள் தடையை உடைத்து வந்தாலும், அணிக்குள் சில மாற்றங்கள் ஏற்படுத்தினாலும், மீண்டும் அதே கம்பீரத்துடன், அதே கெத்துடன் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதனால் மூன்று முக்கிய ஐ.பி.எல். அணிகளுக்கு வாழ்க்கை சோகமாகி இருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு போரடிக்காமல் இருக்க பல பரிமாணங்களில் விளையாடி அசத்தி வெற்றி வாகை சூடுகிறது. இந்தியா முழுவதும் மஞ்சள் கொடிதான் பறக்கிறது என்றாலும், கொஞ்சமும் கூட அல்டாப் இல்லாமல், சீன் போடாமல் விட்ட ராஜ்ஜியத்தை மீண்டும் கைப்பற்றி ஆளத் தொடங்கியிருக்கிறது.

போராட்டங்களால் சென்னையில் இருந்து வெளியேறினாலும், ரசிகர் பட்டாளத்தின் பலத்தை இன்னும் இழக்காமல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் சி.எஸ்.கே. அணியால், தற்போது 3 முக்கிய அணிகள் சோகத்தில் மூழ்கியுள்ளன. டெல்லி, மும்பை, பெங்களூர் ஆகிய அணிகள்தான்.

மொத்தம் உள்ள எட்டு அணிகளில் இந்த மூன்று அணிகள் மட்டுமே இதுவரை 3 வெற்றிகளை கூட அடையாமல் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. இதில் டெல்லி அணியும், மும்பை அணியும் தலா ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளன. அந்தோ பரிதாபத்துக்குரிய இந்த இந்த அணிகள் ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது மிகவும் கடினம்தான்.

ஐ.பி.எல் – 2018 தரவரிசைப் பட்டியல் 

POSITION TEAMS PLAYED WON LOST NET RUN RATE POINTS
1 Chennai Super Kings 5 4 1 +0.742 8
2 Kings XI Punjab 5 4 1 +0.446 8
3 Kolkatta Knight Riders 6 3 3 +0.572 6
4 Sunrisers Hyderabad 5 3 2 +0.301 6
5 RC Bangalore 5 2 3 +0.486 4
6 Rajasthan Royals 5 2 3 +0.403 4
7 Mumbai Indians 4 1 3 +0.445 2
8 Delhi Daredevils 5 1 4 -1.324 2

உங்க கருத்தை தெரிவிக்கலாம்