உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இந்தியர்கள்..!

0
1277

இந்தியர்கள் தங்கள் திமையால் உலக நிறுவனங்களில் முதன்மை அதிகாரியாக பணிபுரிந்து, நம்மை பெருமைபட வைத்துள்ளார்கள் இவர்கள். பலரின் வாழ்க்கையில் உத்வேகத்திற்கு சிறந்த எடுத்துக்காக இவர்களின் வாழ்கை பாடமாக கொண்டுள்ளனர்.

கூகுள் சிஇஓ

உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இந்தியர்கள்..!
மதுரையை பிறந்த சுந்தர் பிச்சை ஏழ்மையில் தான் இவரது குடும்பம் இருந்தது. ஐஐடி கரக்பூர்ல இருந்து உலோகவியல் துறைல பட்டம் வாங்கிட்டு வெளில வந்தப்போ, ஸ்டாண்போர்ட் பல்கலைக்கழகத்துல போய் படிக்க அவருக்கு உதவித்தொகை கிடைச்சுது. அங்க பொருள் அறிவியல் (மேட்டீரியல் சைன்ஸ்) & குறைகடத்தி இயற்பியல் (செமிகண்டக்டர் பிசிக்ஸ்) படிக்கப் போனாரு. அப்பாவின் ஒரு வருட சம்பளத்தை விமான டிக்கெட் கட்ட வேண்டிய சூழல் அதையும் சுந்தர் பிச்சையின் அப்பா எப்படியோ கடன் வாங்கி மகனை அனுப்பி வைத்தார்.

தன்னோட பீஎச்.டீ படிப்ப பாதில விட்டுட்டு, “அப்பளைட் மேட்டிரியல்ஸ்” கிற நிறுவனத்துல பொறியாளராவும், பொருள் மேலாளராவும் சேந்தாரு. 2002ல வார்ட்டான் பள்ளில இருந்து மேலாண்மை பட்டம் வாங்கிட்டு, மேக்கின்சி நிறுவனத்துல மேலாண்மை ஆலோசகரா சேந்தாரு. அங்க தன்னோட சக ஊழியர் ஒருத்தர கூகிள் நிறுவனத்துக்கு வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லி இவரு தடுக்க, கடைசில அந்த வேலை தனக்கு எவளோ ஏத்ததுன்னு இவருக்கு புரிஞ்சுது.

அடோப் சிஇஓ

உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இந்தியர்கள்..!
இன்று மிக முக்கிய மென்பொருள் நிறுவனங்களில் அடோப் முக்கிய இடத்தில் உள்ளது. இதில் தலமை அதிகாரியாக இருக்கும் ஷாந்தனு நாராயண் இந்தியாவின் மற்றுமொரு அடையாளமாக திகழ்கிறார். ஹைத்ராபாத் பப்ளிக் பள்ளியில் படித்து ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர் ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றினார்.

அடுத்து சிலிக்கான் கிராபிக்ஸ் என்ற நிறுவனத்தில் வேலை பார்த்துவிட்டு, “பிக்ட்ரா” என்ற நிறுவனத்தை துவங்கினார். இணையத்தில் புகைப்படங்களை பகிரக்கூடிய நிறுவனம் அது. பின்னர் அந்நிறுவனத்தை அடோபிடம் 1998ல் விற்க முயற்சித்த போது, அதன் தலைமையதிகாரி ஆகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. 2005ல் அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பதவிஉயர்வு பெற்றார்.

பெப்சி சிஇஓ

உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இந்தியர்கள்..!
இந்திரா நூயி சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரியை முடித்து ஐஐஎம் கொல்கத்தாவில் இருந்து மேலாண்மை பட்டம் பெற்றார். படிப்பு முடிச்சு ஜான்சன் & ஜான்சன் மற்றும் மேட்டூர் பீயர்ட்ஷெல் நிறுவனங்கள்ல வேலைபார்த்தார். அதன் பின்பு வெளிநாடு சென்று எம்.எஸ் படிக்க முடிவு செய்தார். ஏல் பல்கலைக்கழகத்தில் உதவித் தொகையோடு படிக்க வாய்ப்பு கிடைத்தது.

படிச்சு முடிச்சு முதல் நேர்காணல்ல போட ஒரு சூட் அவுங்களுக்கு தேவைப்பட்டுச்சு. அத வாங்க ஒரு விடுதில இரவு நேர வரவேற்பாளரா வேலைப்பாத்தாங்க. ஆனா அந்த நேர்காணல்ல அவுங்க நிராகரிக்கப் பட்டாங்க. அடுத்த நேர்காணல்ல புடவை உடுத்தி போனாங்க. அந்த வேலை அவுங்களுக்கு கிடைச்சுது. 1994ல பெப்சி நிறுவனத்துல நூயி சேர்ந்தாங்க. அவுங்க சேந்ததுக்கு அப்பறம் புதுப்புது துறைகள்ல பெப்சி காலடி எடுத்து வெச்சுது. 2001ல தலைமை நிதி அதிகாரியாவும், 2006ல தலைமை நிர்வாக அதிகாரியாவும் உயர்ந்தாங்க.

மைக்ரோ சாப்ட் சிஇஓ

உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இந்தியர்கள்..!

சத்யா நாதெள்ளாவும் ஹைத்ராபாத் பப்லிக் பள்ளியில படிச்சவரு. அப்பறம் மணிப்பால் தொழில்நுட்ப கல்லூரில மின் பொறியியல் துறைல பட்டம் முடிச்சாரு. சின்ன வயசுல கிரிக்கெட் வீரனாகணும்னு கனவு இருந்தாலும், அறிவியல் மேல இருந்த காதல் கடைசில ஜெயிச்சுது. அமெரிக்கா போய் எம்.எஸ் பட்டம் முடிச்சாரு. 1990கள்ல சன் மைக்ரோசிஸ்டம்ஸ்ல வேலைக்கு சேந்தாரு.

1992ல மைக்ரோசாப்ட்ல வேலைக்கு சேந்து, வாரக்கடைசில சிகாகோ பல்கலைக்கழகத்துல மேலாண்மை படிப்பும் முடிச்சாரு. 2014 ஆம் ஆண்டு சத்யா நாதெள்ளா மைக்ரோசாப்டோட மூன்றாவது தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்தியர்கள் பெருமையட வைத்தவர்களில் உலகையே திரும்பி பார்க்க வைத்தவர்கள்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்