இந்தியாவின் முதல் மீத்தேன் பேருந்தை பற்றி உங்களுக்கு தெரியுமா?

0
219

இந்தியாவில் வாகன வர்த்தகத்துறையில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயோ-மீத்தேன் வாயுவில் இயங்கும் பேருந்தை தயாரிக்கிறது.

மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணைந்து நடத்திய நிகழ்வு ஒன்றில், டாடா தனது மீத்தேன் பேருந்தை அறிமுகப்படுத்தியது.

மீத்தேன் வாயுவைக் கொண்டு பேருந்து மட்டுமில்லாமல் இலகு ரக வாகனங்கள், தனிநபர் கட்டுப்பாட்டு வாகனங்கள் உள்ளிட்ட வகை வாகனங்களையும் தயாரிக்க டாடா நிறுவனம் பெரும் திட்டங்களை தீட்டியுள்ளது.

LPO 1613 என்ற மாடலில் மூன்று விதமான எஞ்சின்கள் அறிமுக நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது. BS4 திறன் பெற்ற அந்த எஞ்சின்களுடன் பூனேவில் பேருந்தை கட்டமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முதற்படியாகவே டாடா நிறுவனம் இந்த மீத்தேன் வாகன தயாரிப்பை தொடங்கியுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்