முடி அடர்த்தியாக வளர இந்த வேப்பிலை வைத்தியம் ட்ரை பண்ணிப்பாருங்க!!

  0
  10

  நாமெல்லாம் காலரை தூக்கிக் கொள்ள வேண்டும், ஏன் தெரியுமா? இந்தியாவில்
  அதுவும் தமிழ் நாட்டில் மூலை முடுக்கு காணும் இடங்களிலெல்லாம் வளரும்
  வேப்பிலை மரம் மிக அரிய சிறந்த மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

  வெளி நாடுகளில் அதிக பணம் கொடுத்து வாங்கும் மூலிகையாக இந்த வேப்பிலை இருக்கிறது, நமக்கு காணும் இடங்களிலெல்லாம் கிடைக்கிறது என்றால் நாம் பெருமைப் படத்தானே வேண்டும்.

  அப்படிப்பட்ட வேப்பிலை மருத்துவ குணமட்டுமல்ல, அழகிற்கும் தனது நன்மைகளை
  வரை வழங்குகிறது. தினமும் வேப்பிலையை அரைத்து உடலில் பூசி குளித்துப்
  பாருங்கள். உங்கள் தேகம் ஜொலிக்கும்.

  அப்படிப்பட்ட வேப்பிலை கூந்தல் வளர்ச்சி, பொடுகு, சொட்டை, முடி உதிர்தல் போன்ற்றவற்றிற்கும் பயன்படுகிறது. வேப்பிலையை எப்படி கூந்தலுக்கு பயன்ப்படுத்தலாம் எனப் பார்க்கலாம்.

  சொட்டை அல்லது முடி உதிர்தல் :

  வேப்பிலை- கைப்பிடி
  நீர்- தேவையான அளவு
  முட்டை -1

  வேப்பிலையை நீருடன் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு முட்டையை கலந்து தலைமுடியில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.

  நேரமிருந்தால் வாரம் இருமுறை அல்லது வாரம் ஒர்முறை இப்படி செய்தால் முடி
  உதிர்தல் பிரச்சனை முடிவுக்கு வரும்.

  பொடுகு :

  வேப்பிலை – கைப்பிடி

  தேங்காய் எண்ணெய்- கால் கப்

  எலுமிச்சை சாறு – அரை மூடி.

  வேப்பிலையை அரைத்துக் கொள்ளுங்கள். அடுப்பை குறைந்த தீயில் வைத்து தேங்காய் எண்ணெயை சூடுபடுத்தி அதில் வேப்பிலை விழுதை போடவும். சலசலப்பு
  அடங்கியவுடன் அடுப்பை அணைத்து ஆற விடுங்கள்.

  அந்த எண்ணெயில் எலுமிச்சைசாறு கலந்து தலையில் இந்த எண்ணெயை இளஞ்சூடாக தேய்த்தல பொடுகு, அரிப்பு, முடி உதிர்தல் பிரச்சனைகள் மாயமாக மறைந்துவிடும். கூந்தலும் நன்றாக வளரும்.

  SHARE

  உங்க கருத்தை தெரிவிக்கலாம்