ஒல்லிப்பிச்சான் உடலை குண்டாக்கனுமா? இந்த ஒரு இஞ்ச் பட்டை எடுத்துக்கோங்க!!

0
23

பட்டை சின்னதா மரத்திலிருந்து உரிக்கப்பட்டது போலத்தான் இருக்கும். ஆனால் சுருள்
சுருளான இந்த பட்டை வீரியமிக்கது. புற்று நோயை எட்டி நிறக்ச் சொல்லும் வல்லமை
படைத்தது. ஆஸ்துமா, சரும நோய்கள் எல்லாவற்றையும் தூர ஓடிப் போகச் செய்யும்.

பட்டையை நாம் பிரியாணி தே நீர் தயாடிக்க என உப்யோகப்படுத்துகிறோம். சுவையும்
மணத்திற்காக அதனை பயன்படுத்தினாலும், மறைமுகமாக அது பல நன்மைகளை
தருகிறது.இதனை நோய்க்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம் என்ப்து தெரியுமா? எப்படி அதனை பயன்படுத்துவது என பார்க்கலாம்.

உடல் பருமனாக :

கால் கப் வெண்ணெயை உருக்கி அதில் இரண்டு டீஸ்பூன் கருப்பட்டி, ஒரு டீஸ்பூன் பட்டைப் பொடி சேர்த்து ஐந்து நிமிடங்கள் நன்றாகக் கலக்கி வைத்துக்கொள்ள
வேண்டும். ஒல்லியான உடல்வாகு உள்ளவர்கள் இதை அவ்வப்போது உணவில் சேர்த்து வந்தால் விரைவில் சதை பிடிக்கும்.

பல் கூச்சத்திற்கு :

திரிபலா சூரணத்துடன் ஒரு சிட்டிகை பட்டைத்தூள் சேர்த்து, பற்பொடியாகப்
பயன்படுத்தலாம். இதே கலவையை வாய் கொப்பளிக்கும் நீராகவும் பயன்படுத்தலாம்.
இதனால் பற்களில் உண்டாகும் கூச்சம், வாய் நாற்றம் மறையும்.

சரும அலர்ஜி :

பட்டை, சோம்பு, கிராம்பு, சுக்கு தலா எல்லாம் சமமாக கால் ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு 500 மில்லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும். 100 மில்லியாக வற்றியதும் அதைப் பருகினால் உடலில் தோன்றும் அரிப்பு, எரிச்சல் மறையும். ஒவ்வாமைப் பிரச்னையைப் போக்கும்.

வயிற்றுப் பிரச்சனை :

ஏலக்காய், தோல் சீவிய சுக்கு, பட்டை… மூன்றையும் ஒன்றாகப் பொடித்து,
மில்லி கிராம் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் செரியாமை, வயிற்றுப்பொருமல், கழிச்சல் குணமாகும்.

சுவாசக் கோளாறு :

சுவாசக் கோளாறுகளைக் குணமாக்குவதிலும் லவங்கப் பட்டையின் பங்கு அதிகம். சுக்கு, மிளகு, திப்பிலி, லவங்கப்பட்டை எல்லாவற்றையும் சமமாக கல ஸ்பூன் அளவு எடுத்து, சிறிது துளசி இலையும் கருப்பட்டியும் சேர்த்துக் குடிநீராகக் காய்ச்சிக்குடித்தால், மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம் உடனடியாகக் குறையும்.

SHARE