புருவம் அடர்த்தியாக சீக்கிரம் வளரனுமா? தினமும் நைட் இப்படி செய்ங்க!!

0
9

கூந்தலுக்கு பிறகு பெண்கள் அதிகம் கவலைப்படுவது புருவத்திற்குதான். கண்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் முடியெ இல்லாத புருவம் இருந்தால் கண்கள் எடுபடாது.

அதுபோல் சிறிய கண்களையும் அடர்த்தியான புருவம் அழகாக காட்டு. வில்லென புருவம் என்று சங்க காலம் தொட்டு நமது கவிதைகளிலும் , சினிமாப் பாடல்களிலும் இடம் பெற்றுள்ளது.

புருவங்கள் அத்தனை ஈர்ப்புடையது. அப்படி வில் போல் இல்லையென்றாலும் சரி அடர்த்தியான புருவமாகவது கிடைக்க வழி செய்யுங்கள் என்று கேட்கிறீர்களா? இந்த குறிப்பு உங்களுக்குத்தான்.

தினமும் இரவு தூங்குவதற்கு முன் சில நொடிகள் இதற்காக செல்வழித்தால் போதும். சோம்பேறித்தனம்தான் உங்கள் முதல் எதிரி. அதனை விட்டு இங்கெ சொன்னபடி செய்ய்த தொடங்குங்கள்.

குறிப்புகளை பயன்படுத்துவதற்கு முன் உங்கள் புருவங்களில் இருக்கும் முடிகளை அவ்வப்போது திருகிக் கொண்டிருந்தால் அங்கிருக்கும் புள்ளிகள் தூண்டப்பட்டு, முடி செல்கள் அதிகம் உருவாக ஆரம்பிக்கும். அதனால் நேரம் கிடைக்கும்போது இதை செய்யுங்கள்.

குறிப்பு- 1 :

விளக்கெண்ணெயை ஐப்ரோ பென்சிலால் எண்ணெயைத் தொட்டுப் புருவத்தின் வடிவத்துக்கு பென்சிலால் வரைந்துகொண்டு படுத்துக் கொள்ளுங்கள். இப்படிச் செய்வதால் வலுவிழந்த புருவ முடிகள் அந்த வடிவத்திலேயே வளர ஆரம்பிக்கும்.

குறிப்பு- 2 :

ஆலிவ் எண்ணெய் தேங்காய் கலந்த கலவையை தினமும் இரவில் தூங்குவதற்கு முன் புருவங்களில் விரல்கள் அல்லது பட்ஸ் மூலம் தடவி வந்தால், மிக விரைவிலேயே அடர்த்தியும் கருமையும் நிறைந்த முடி வளரும்.அதை உங்களால் உணர முடியும்.

குறிப்பு- 3;

வெங்காயச் சாறில் அதிக சல்ஃபர் இருப்பதால் முடி வளர்ச்சியை தூண்டும். வெங்காத்தின் சாறு பிழிந்து பஞ்சினால் நனைத்து புருவத்தில் தடவுங்கள். தினமும் செய்தால் வேகமாக முடி வளரும்.

குறிப்பு -4 :

கற்றாழையின் ஜெல் பகுதியை எடுத்து இரவு தூங்குவதற்கு முன் தடவி லேசாக மசாஜ் செய்யுங்கள். மறு நாள் கழுவலாம். இது நல்ல பலன் தரும். புருவத்தில் உண்டாகும் பாதிப்புகளை சரி செய்கிறது.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்