வீட்டில் தீயசக்திகள் விலக என்ன செய்ய வேண்டும்?

0
16

வீட்டில் சில சமயங்களில் ஏதாவது மனதிற்கு சங்கடப்படும்படி நடக்கும், ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல் நலக்குறைப்பாடுகள், பணப்பிரச்சனை, எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனை என்று இருந்தால் அந்த வீட்டில் தீய சக்திகளின் தாக்கம் அதிகமாக இருக்கலாம் என்று பொருள்.

தீய சக்திகள் குறைய முதலில் நல்ல எண்ணங்களை வளர்ப்பது மிக மிக முக்கியம். அதன் பின் நீங்கள் வணங்கும் கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை வையுங்கள்.
சோதிப்பானே தவிர ஒருபோதும் கை விட மாட்டான். அவரவர் கர்மாக்களின் படி வாழ்க்கை நடந்தாலும் சின்ன சின்ன பிரச்சனைகளை சில நல்ல சாதகமான செயல்களின் மூலம் சரி செய்துவிடலாம். அப்படிப்பட்ட விஷயங்களை இப்போது காணலாம்.

உடல் பாதிப்புகள் நீங்க :

உள்ளங்கையளவு உப்பை எடுத்து கண்ணாடி பௌலில் போட்டு குளியலறையில் வைக்கவேண்டும். இதனை 3 அல்லது 5 நாட்களிற்கு ஒருமுறை மாற்றி வைக்கவேண்டும். இதனை தொடர்ந்து செய்யும் போது வீட்டில் உள்ள ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலைக்கும்.

கெட்ட பார்வை விலக :

நமது வீட்டின் வாசலில் ஒருகைப்பிடி அளவு உப்பை எடுத்து ஒரு சிவப்பு துணியில் கட்டி தொங்கவிடவேண்டும். இதனை செய்யும் போது மற்றவர்களின் கெட்ட பார்வைகள் உங்களை அண்டாது.

உப்பு :

சமையல் அறையில் எப்பொழுதுமே உப்பை பற்றாக்குறையாக இருக்கக் கூடாது. இதனால் நம்வீட்டில் எப்பொழுதும் செல்வவளம் குறையாமல் இருக்கும்.

குளிக்கும்போது :

வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய் கிழமைகளில் நாம் குளிக்கும் தண்ணீரில் சிறிது கடல் உப்பை கலந்து குளிக்க வேண்டும். இதனை செய்தால் மனஅழுத்தங்கள்
குறைவதோடு எதிர்மறை எண்ணங்கள் விலகி செல்வவளம் பெருகும்.

மேலே சொன்னவற்றை எப்போதும் ஞாயிற்றுக் கிழமையில் செய்ய்க் கூடாது.

குறிப்பு – ஞாயிற்று கிழமைகளில் இவற்றினை செய்ய கூடாது

SHARE