நோய் எதிர்ப்பு சக்தியை தரும் கிராமத்து கருப்பட்டி காபியை எப்படி தயாரிப்பது?

0
13

இன்றும் கிராமங்களில் கருப்பட்டி காபி குடிப்பது வழக்கமாக இருக்கிறது. நீங்கள்
கவனித்திருக்கிறீர்களா? அங்குள்ள மக்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவும் ஆழ்ந்த
தூக்கத்தையும் பெற்றிருப்பார்கள்.

நகரத்தில் வாழ்பவர்களுக்கு கொஞ்சம் பருவ நிலிய மாற்றம் கண்டாலே உடல் சுனங்க
ஆரம்பித்துவிடும். ஆனல எல்லா ஓருவ நிலைக்கும் உடல் பழகி என்றும் நோய்
நெருங்காமல் கிராமத்தில் இருப்பார்கள் அதற்கு காரணம் அவர்கள் துரித உணவுகளை
நெருங்க விடாமல் இருப்பதுதான்.

மேலும், சோளம், கம்பு, ராகி, கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவைகளைதான் அவர்கள் அன்றாட உணவுகள். அவ்வாறு கிராமத்து கருப்பட்டி காபி எப்படி செய்வது என பார்க்கலாம்.

கருப்பட்டி காபியில் உள்ள மருத்துவ குணங்களின் மூலம், உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, புத்துணர்ச்சியைப் பெற முடியும்.

இதனை மழைக்காலத்தில் தினமும் செய்து குடித்து வந்தால், நோய்களின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கலாம்.பனிக்காலத்தில் ஏற்படும் சளிக்கு நல்ல மருந்தாகவும் இந்த கருப்பட்டி காபி பயன்படும்.

தேவையான பொருட்கள்:

கருப்பட்டி – 1 டேபிள் ஸ்பூன்,
தண்ணீர் – 1 கப்
சுக்கு பொடி – 1 ஸ்பூன்

பொடி செய்ய தேவையான பொருட்கள்:

சுக்கு தூள் – 1/2 கப்
மல்லி – 2 டேபிள் ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
பனங்கற்கண்டு – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் பொடி செய்ய தேவையான பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடி செய்து
கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க
ஆரம்பித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள பொடியை ஒரு ஸ்பூன் மற்றும் கருப்பட்டியை சேருங்கள்.

பின்னர் 2-3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். பின்பு அதனை இறக்கி வடிகட்டினால், சுவையான கருப்பட்டி காபி தயார். தேவைப்பட்டவர்கள் இதனுடன் பால் சேர்த்து பருகலாம். பின்னர் பாருங்கள் நளுக்கு நாள் உங்கள் பலம் கூடுவதை.

SHARE