உடலுக்கு வலு சேர்க்கும் வரகு கஞ்சி செய்யும் முறை!! எளிய ரெசிபி!!

0
19

இப்போது பரவலாக சிறுதானியங்களைப் பற்றி எல்லாரும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றனர். கம்பு, சோளம், வரகு போன்றவைகள் உங்களை இரும்பு போல் மாற்றும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஆகவேதான் வயல் உழுபவர்களின் தேகம் குலையாமல் இருக்கிறது.

வாரம் இருமுறையாவது சிருதானியங்களை சாப்பிடப் பழகுங்கள். எந்த நோயும் உங்களை நெருங்காது. இன்று இங்கு நாம் வரகு கஞ்சி எப்படி செய்வதென பார்க்கலாம்.
அதற்கு முன் வரகைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்து கொள்ளுங்கள்.

சத்துக்கள் :

அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது.வரகில் புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியவை உள்ளன. இவை விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.

நன்மைகள் :

சர்க்கரை அளவை குறைக்கிறது.
மூட்டுவலியை குறைக்க உதவுகிறது.
கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண் நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் உண்டு
நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும்.
மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்து சாப்பிடுவது நல்லது.

வரகு கஞ்சி

தேவையானவை :

வரகு அரிசி – கால் கப்
பூண்டு – 10 கல்
சுக்கு – ஒரு துண்டு
சீரகம் – 1 ஸ்பூன்
வெந்தயம் – 1 ஸ்பூன்
பால் – 1 கப்
உப்பு – தேவைக்கு
சின்ன வெங்காயம் – தேவைக்கு

செய்முறை :

வரகு அரிசியை சுத்தம் செய்து ஒரு டம்ளர் தண்ணீரில் வேக வைக்கவும். பூண்டு, வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி இரண்டையும் லேசாக வதிக்கிக் கொள்ளுங்கள். வைத்துக் கொள்ளுங்கள். சுக்கை தட்டி வையுங்கள்.

வரகு அரிசி பாதி அளவு வெந்ததும், வதக்கிய பூண்டு வெங்காயம், சுக்கு, சீரகம், வெந்தயம், பால் சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்து குழைவாக வந்ததும்  தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும். வரகு கஞ்சி ரெடி.. இதன் சுவை அருமையாக இருக்கும் சத்தும் மிகுந்தது.

 

SHARE