ருசி மிகுந்த மாம்பழத்தை வாங்குவது எப்படி?

0
435

மாம்பழ சீசன் தொடங்கிவிட்டது. பழங்களிலேயே அதிக ருசி கொண்டதாகவும், அதிக ஊட்டச்சத்துக்கள் மிகுந்ததாகவும் திகழ்கிறது மாம்பழம். இதனால்தான் மா, பலா, வாழை என முக்கனிகளில் முதல் கனியாக மாம்பழம் இடம்பெற்றிருக்கிறது. இது சம்மர் சீசன் என்பதால் பழச்சாறு, இளநீர், தர்பூசணி ஆகிய உணவுப்பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. மாம்பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் என நாம் அறிந்திருப்போம். ஆனால் அதை எப்படி தேர்வு செய்வது? எப்படி வாங்குவது? என்பதுதான் பலருக்கும் கேள்விக்குறியான சவால்.

நேர்த்தியாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் பழங்களின் அழகைக் கண்டு வாங்கிவந்துவிடுவோம். ஆனால் அதில் சுவை, தரம் இருக்கும் என நினைத்தால் அது தவறு. வீட்டுக்கு வந்து நறுக்கி சாப்பிட்டால் சில மாம்பழங்களில் சுவையே இருக்காது. சில பழங்களில் கருப்பு தங்கியிருக்கும். வண்டு இருக்கும். சில பழங்கள் மிகவும் புளிப்புச் சுவை உடையதாக இருக்கும். சரி, பிறகு எப்படி மாம்பழத்தை தேர்வு செய்ய வேண்டும்? இங்கே பாப்போம்.

மாம்பழங்த்தை தொடும்போது நன்கு கணம் உடையதாகவும், தோல் இறுக்கமாக இருப்பதாகவும் உணர்ந்தால் அது நல்ல பழம். இப்பழத்தை அடுத்த 3 நாட்கள் கூட வைத்திருந்து சாப்பிடலாம்.

மாம்பழத்தை கார்பனேட் கல் போட்டு செயற்கையாகவே பழுக்க வைப்பார்கள். இந்த பழங்கள் பச்சை நிறத்திலேயே இருக்கும். பழத்தின் எல்லா பகுதிகளுமே பழுத்து காணப்படும். அழுத்தினால் அமுங்கும்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்