விநாயகரை எந்த திசையில் வைத்து வணங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும்?

0
19

விநாயகர் “செல்ல கடவுளாக “த்தான் எல்லாராலும் விரும்பப்படுகிறது. விநாயகர் சிலை விசேஷங்களுக்கு, பரிசாக தருவதும் நாம் நடைமுறையில் வைத்திருக்கிறோம். மற்ற எந்த கடவுளையும் அப்படி யாரும் தர முன்வருவதில்லை. அது போல் வி நாயகரை திருடிக் கொண்டு வீட்டில் வைப்பதும் நிறைய இடத்தில் செய்வார்கள்.

விநாயகரை அப்படி பரிசாக தருவதற்கு, திருடி கொண்டு வந்து வீட்டில் வைப்பதற்கு பின் உள்ள காரணம் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்பிக்கைதான்.

வினாயகரை படமாகவோ அல்லது சிலையாகவோ அப்படி வீட்டில் வைப்பதால்
அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பது உண்மையே. ஆனால் நம் இஷ்டத்திற்கு எங்கு
வேண்டுமானாலும் வைக்கலாம் என்பது தவறு.

காரணம் விநாயகரின் முன்பக்கம் செல்வத்தையும் பின்பக்கம் வறுமையையும்
குறிக்கும்.அது போ இடது தும்பிக்கை, வலது தும்பிக்கைக்கும் சில அனுகூலங்கள் உண்டு. அவ்வாறு விநாயகர் படத்தை எங்கு எப்படி வைத்து வணங்கினல் அவரது அருள் கிடைத்து வீட்டில் செல்வம் பெருகும் என தெரிந்து கொள்ளலாம்.

தும்பிக்கை :

விநாயகரின் தும்பிக்கையானது எப்போதும் இடது புறமுள்ள அவரின் தாயார் கௌரியை பார்த்தவாறு இருக்கும் படத்தை வணங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

பிள்ளையாரின் பின்புறம் :

விநாயகரின் பின்புறம் வறுமையை குறிக்கும். எனவே விநாயகரின் பின்புறம் வீட்டின்
எந்தவொரு அறையினையும் பார்த்தவாறு வைக்காமல், வீட்டின் வெளிப்புறத்தினை
பார்த்தவாறு வைக்க வேண்டும்.

திசை :

விநாயகரை தென்புற திசையில் வைத்து வணங்கக் கூடாது, கிழக்கு அல்லது மேற்கு
திசையில் வைத்து வணங்கினால் வீட்டின் செல்வம் அதிகரிக்கும்.

கழிவறை நோக்கி :

கழிவறையுடன் இணைக்கப்பட்டுள்ள சுவரை நோக்கி விநாயகரின் சிலையை வைக்கக்
கூடாது. அதேபோல அந்த சுவரில் சாய்த்தும் வைக்கக் கூடாது.

உலோக பிள்ளையார் :

உலோகத்தில் செய்யப்பட்ட விநாயகரின் சிலையை கிழக்கு அல்லது மேற்கு திசையினை நோக்கி வைத்து வணங்க வேண்டும். அதுவும் வடகிழக்கு மூலையில் வைத்து வணங்குவது மிகவும் நல்லது.

மாடிப்படி அடியில் :

வீட்டிற்குள் மாடிப்படி இருந்தால் அதன் அடியில் விநாயகரை வைக்கக் கூடாது, ஏனெனில் அது துரதிர்ஷ்டத்தை உண்டாக்கும்.

SHARE