பார்த்தவுடன் செயற்கையாக பழுத்த மாம்பழங்களை எப்படி கண்டுபிடிப்பது?

0
13

வெயில் காலம் வந்தவுடன் குழந்தைகள் குதூகலமாவது இரண்டு விஷயகளுக்காக, ஒன்று பள்ளி விடுமுறை,..மற்றொன்று மாம்பழங்கள்.. பொதுவாக மாம்பழங்கள் நன்றாக பழுக்கும் காலம் இந்த ஜூன் மாதம்தான். பழுத்த மாம்பழங்களை லோடு ஏற்றி வரும்போது நசுங்கி சேதாரமாகி நஷ்டத்திய தரும் என்பதற்காக பழம் கனியும் வரை காத்திருக்க முடியாமல் விரைவிலேயே லாபம் காண காயாக இருக்கும்போதே பறிக்கின்றனர். அப்படி காயாக பறித்த மாம்பழங்களை எப்படி பழக்க வைப்பது?

எப்படியென்றால் மாங்காய் குவியலுக்கு நடுவே, கால்சியம் கார்பைடு கற்களை துணியில் பொட்டலமாக கட்டிப் போட்டு வைக்கிறார்கள். இந்த கற்களில் “ஆர்சனிக் பாஸ்பரஸ் ஹைட்ரைட்” என்ற நச்சுத்தன்மை கொண்ட வாயு சிறிதளவு உள்ளது.

மாம்பழத்தில் உள்ள நீர்ச்சத்து ஆவியாக மாற இந்த வாயு உருவாகிறது. இவ்வாறு செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிடுவதால் கண், மூக்கு, தொண்டை, நுரையீரல் போன்ற உறுப்புகளில் எரிச்சல் உண்டாகும். நரம்பு மண்டலம் பாதிப்பு அடையும். தலைவலி, மயக்கம் வரலாம். தூக்கமின்மை ஏற்படும்.

பார்த்தவுடன் எப்படி கண்டுபிடிப்பது?

செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள், சுருக்கம் இல்லாமல் பளபளப்பாக இருக்கும். இயற்கையான மணம் குறைவாக இருக்கும். பழங்களின் நிறம் ஒரே மாதிரியாக இல்லாமல், ஆங்காங்கே பச்சை நிறத்தில் திட்டு திட்டாக காணப்படும்.செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழங்கள், காம்பு பச்சையாகவும், பழம் மஞ்சளாகவும் இருக்கும்.

 

கரும்புள்ளிகள் :

செய்ற்கை முறையில் பழுத்த மாம்பழங்களில் சில நாட்களில் கருப்பு நிற புள்ளிகள் உருவாகும். அப்படியிருந்தால் அவை செயற்கை முறையில் பழுக்க வைத்தவையாகும்.

நீரில் பரிசோதனை :

மாம்பழம் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டதா என்பதைக் கண்டுபிடிக்க, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மாம்பழத்தை அதில் போட வேண்டும். மூழ்கிய பழம் நல்லது என்றும், மூழ்காத பழம் தரம் அற்றது என்றும் தெரிந்து கொள்ளலாம்.

SHARE

உங்க கருத்தை தெரிவிக்கலாம்