வாழைப் பழத்தை தோலைக் கொண்டு எப்படி முகப்பருக்களை மறைய வைக்கலாம்?

  0
  291

  வாழைப் பழம் என்றாலே நமக்கு கவுண்டமணி ஜோக் நினைவிற்கு வரும். அவர் வாழைப் பழத் தோலைக் கொண்டு கூட காமெடி பண்ணிருக்கிறார். எல்லா விட்டமின்களும் கொண்ட வாழைப் பழம் சாப்பிடுவது எத்தனை நல்லதோ, அத்தனை நன்மைகள் அதன் தோலிலும் இருக்கின்றன. வாழைப்பழத் தோல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அழகிற்கும் அழகு சேர்க்கும் என்பது புதுத் தகவல்.

  இங்கு வாழைப் பழத் தோல் கொண்டு செய்யப்படும் இந்த ரெசிப்பிக்கள் என்னென்ன சருமப் பிரச்சனைகளைப் போக்கும் என சொல்லப்பட்டுள்ளது. உபயோகித்து பயன்பெறுங்கள்.

  ஜொலிக்கும் சருமம் :

  வாழைப் பழத் தோலில் சருமத்திற்கு மினுமினுப்பு தருகின்றது. சுருக்கங்களைப் போக்குகின்றது. முகப்பருக்களை நீக்குகிறது. கரும்புள்ளி,
  கருமையையும் நீக்குகின்றது.வாழைப் பழத் தோலை எப்படி ருமப் பிரச்சனையைப் போக்கலாம் என பார்க்கலாம்.

  கருவளையம் மறைய ;

  வாழைப் பழத் தோலை கண்களுக்கு அடியில் வைத்து அப்படியே 15 நிமிடங்கள் வைத்து கண்களை மூடிக் கொள்ளவும். தினமும்
  அல்லது நேரமிருக்கும்போது செய்தால் விரைவில் கருவளையம் காணாமல் போய்விடுகிறது.

  முகப்பருவிற்கு :

  தேவையானவை :

  முழு வாழைப் பழத் தோல்- ஒன்று

  கஸ்தூரி மஞ்சள் – 1 ஸ்பூன்
  தேன்- 1 ஸ்பூன்

  பயன்படுத்தும் முறை :

  வாழைப் பழத்தோலை நன்றாக மசித்து அல்லது மிக்ஸ்யில் கூழாக்கி அதனுடன் மஞ்சள் மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவ
  வேண்டும். பின்னர் 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.

  எப்போது செய்யலாம் ?

  வாரம் இரு நாட்கள் பயன்டுத்துங்கள். இப்படி தொடர்ந்து செய்தால் முகப்பருக்கள் மறைந்து, முகம் மிளிரும்.

  சுருக்கங்கள் மறைய :

  தேவையானவை

  வாழைப் பழத் தோல் – 1 டேபிள் ஸ்பூன்
  ஆலிவ் எண்ணெய் – 2 ஸ்பூன்

  பயன்படுத்தும் முறை :

  கூழாக்கிய வாழைப் பழத்தோலுடன் ஆலிவ் எண்ணெய் கலந்து முகத்தில் தடவி அப்படியே 15 நிமிடங்கள் காய விடுங்கள். பின்னர் சோப்
  போட்டு முகத்தை கழுவலாம். அல்லது குளிப்பதற்கு முன் இப்படி செய்யலாம்.

  எப்போது செய்யலாம் ?

  வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் செய்ய வேண்டும். அதிக சுருக்கங்கள் இருந்தால் தினமும் செய்யலாம்.

  எண்ணெய் சருமத்திற்கு ;

  சிலருக்கு எப்போதும் முகத்தில் எண்ணெய் வடிந்து கொண்டிருக்கும். அவர்களுக்கு இந்த வாழைப் பழத் தோல் எப்படி உபயோகப்படுகிறது எனப் பார்க்கலாம்.

  தேவையானவை :
  வாழைப் பழத் தோல்- 1 டேபிள் ஸ்பூன்
  சமையல் சோடா- ஒரு சிட்டிகை
  எலுமிச்சை சாறு – அரை ஸ்பூன்

  பயன்படுத்தும் முறை :

  கூழாக்கிய வாழைப் பழத் தோலில் சமையல் சோடா, எலுமிச்சை சாறு போன்றவற்றை கலந்து முகத்தில் பேக் போலப் போடுங்கள். 20
  நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள். வாரம் ஒரு நாள் இப்படி செய்து பாருங்கள். நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

  கரும்புள்ளிகளுக்கு :

  தேவையானவை :
  வாழைப் பழத் தோல்- 1 டேபிள் ஸ்பூன்
  வெள்ளைக் கரு – ஒன்று
  லாவெண்டர் எஸன்ஷியல் எண்ணெய்- 1 ஸ்பூன்.

  பயன்படுத்தும் முறை :

  மேலே சொன்ன எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து முகம், கழுத்து போன்ற பகுதிகளில் தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து நன்றாக அலசவும். வாரம் மூன்று நாட்கள் செய்தால் கரும்புள்ளிகள் மறையும்.

  SHARE

  உங்க கருத்தை தெரிவிக்கலாம்