ஆஃபீஸ்ல அதிக ‘ஹைக்’ வாங்கணுமா? இதை ட்ரை பண்ணி பாருங்க!

0
788

இந்தாண்டு சம்பள உயர்வு எவ்வளவு கிடைக்க வேண்டும் என யோசித்துக்கொண்டிருப்பீர்கள். சம்பள உயர்வு நிச்சயம். அதற்கு நீங்கள் செய்யவேண்டிய 10 எளிமையான விஷயங்கள் இருக்கின்றன. இந்த விஷயங்களை இன்றிலிருந்தே செய்ய துவங்கினால் போதுமானது.

1. ஆவணப்படுத்துங்கள்:

தினமும் அலுவலில் என்ன செய்துள்ளீர்கள். என்ன சாதனை செய்திருக்கிறீர்கள் என்பதை தினமும் குறிப்பாகவோ அல்லது விவரமாகவோ ஆவணப்படுத்துங்கள். உங்களது சம்பள உயர்வு குறித்து ரெவ்யூ நடக்கும்போது அவற்றை காண்பித்தால் உங்களுக்கு சல்ல சம்பள உயர்வு கிடைக்கும். உங்களது ஆவணங்களை பார்த்தப் பின் மேனேஜரால் உங்களை எந்த இடத்திலும் பின்தள்ள முடியாது.

2. சுய மதிப்பீடு:

தன்னம்பிக்கையுடன் உங்களை நீங்களே மதிப்பீடு செய்யுங்கள். நீங்கள் செய்யும் வேலை எத்தகையது, உங்களது பங்களிப்புக்கு தகுந்த சம்பளம் கிடைக்கிறதா, உங்களுக்கு எவ்வளவு உயர்வு தரலாம்? இந்த துறையில் உங்களால் எந்த அளவுக்கு நீந்த முடியும் என்பதை அறிந்து வைத்திடுங்கள்.

3. தலைமையுடன் இணக்கம்:

ஒருவேளை, நீங்கள் உங்களுடைய தலைமையுடன் முரண்பட்டு இருந்தால், உங்களது விடாமுயற்சி யும், உங்களுடைய கடின உழைப்பும் விழலுக்கு இறைத்த நீர் போலாகிவிடும். அவர்தான் இறுதியில் சம்பள உயர்வைத் தீர்மானிப்பவராக இருப்பார்.

4 முக்கிய புள்ளியாக இருங்கள்:

உங்கள் அணியில் உள்ளவர்களுடன் இணைந்தும், அவர்களுக்கு உதவி செய்வதையும், வழிகாட்டுவதையும் முக்கிய பழக்கமாக வைத்திருங்கள். இது முக்கியமான தருணத்தில் சராசரி சம்பளத்தைவிட அதிகமான சம்பளத்தைப் பெற்றுத் தரும்.

5 இலக்கை நிர்ணயுங்கள்:

உங்களுடைய அடுத்த வருட இலக்கை, உங்களுடைய தலைமை அதிகாரியுடன் உட்கார்ந்து விவாதியுங்கள். இது உங்களுக்கு நிறுவனத்தின் மீதுள்ள விசுவாசத்தையும், அர்ப்பணிப்பையும் உணர வைக்கும். இது உங்களுக்கு நல்ல மதிப்பையும், சம்பள உயர்வையும் பெற்றுத் தரும்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்