ருசியான, அதிகளவு தண்ணீர் உள்ள இளநீரை தேர்வு செய்வது எப்படி?

0
11690

இளநீரின் பயன்கள் இங்கே நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கை பானம் இது. சுக்ரோஸ், சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும், இரும்புச்சத்து, நீர்ச்சத்து, நார்ச்சத்து என எல்லா விதமான சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. இவ்வளவு விஷயங்களையும் தெரிந்துகொண்டால் மட்டும் போதாது.

நல்ல ருசியான தண்ணீர் நிறைந்த இளநீரை தேர்வு செய்யவும் தெரிந்துகொள்ள வேண்டும். எப்படி சிறந்த இளநீரை தேர்வு செய்வது என்பதை இனி பார்ப்போம்.

பெரிய அளவாகவும், சிறிய அளவாகவும் இல்லாமல், நடுத்தர அளவு இளநீரை தேர்வு செய்யுங்கள். சிறிய இளநீரில் தண்ணீர் மிக குறைவாகவேதான் இருக்கும்.

பெரிய இளநீரில் நிறைய தண்ணீர் இருக்கும் என நினைப்பதும் தவறு. அதில் தண்ணீரின் அளவை விட தேங்காய் சதைப்பகுதி அதிகமாக வளர்ந்திருக்கும் என்பதே உண்மை.

இளநீரின் மேல்பகுதி பச்சையாகவும், வளவளப்பாகவும் இருக்க வேண்டும். தொடும்போதே அது புத்துணர்ச்சியை உணர்த்தும் விதமாக இருக்க வேண்டும்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்