குழந்தையை கொடுக்கும் முன் ஒரு ஆண் எப்படி ஆரோக்கியமாக இருக்க வேண்டும்?

    0
    730

    குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுப்பதில் பெண்கள் பின்பற்றும் ஆரோக்கிய வழிமுறைகளைப் போல ஆண்களும் தங்களது ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க வேண்டும். பெண்கள் தங்களது இடைப்பகுதியையும், கருப்பையையும் திடமாக வைத்துக்கொள்வதற்காக மகப்பேறு காலத்தில் விசேட உணவுகளை உண்பர். இதே போல ஆண்களும் தங்களது வளத்தை பாதுகாக்க வேண்டும். திடமான உயிர்சக்தி உற்பத்திக்காக சத்தான உணவுமுறைகளையும், வழிமுறைகளையும் பின்பற்றிட வேண்டும். அப்போதுதான் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கத்துடன் பிறக்கும்.

    ஆண்கள் திருமணத்திற்கு முன்பிருந்தே சீரான உடல் எடையை பேணுதல் அவசியம். உயரத்திற்கு அதிகமான உடல் எடை கொண்டவர்களுக்கு உயிர்ச்சத்தின் தரம் குறைய வாய்ப்பிருகிறது.

    மிகுந்த சத்தான காய்கறிகள், பழங்கள், பால், மீன் மற்றும் முட்டை போன்ற உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வகை உணவுகளிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் உங்களது உயிர்ச்சத்தின் தரத்தையும், உற்பத்தியையும் மேம்படுத்தும்.